•காஸ்மீரில் ஒரு வயது குழந்தையை
“பெல்லட” குண்டால் சுட்ட இந்திய ராணுவம்!
“பெல்லட” குண்டால் சுட்ட இந்திய ராணுவம்!
காந்தி தேசத்து ராணுவம் தனது சொந்த நாட்டு குழந்தையை துப்பாக்கியால் சுடுமா என்று சிலர் அப்பாவித்தனமாய் கேட்கலாம்.
காந்தி தேசத்து ராணுவத்தின் யோக்கியத்தை இந்திய மக்கள் அறியாமல் இருக்கலாம்.
ஆனால் ஈழத்து தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஈழத்தில் இந்த ராணுவம் 80வயதுக் கிழவியைக்கூட பாலியல் வல்லுறவு செய்த கொடூரத்தை கண்ணால் கண்டவர்கள் அல்லவா!
பெல்லட் குண்டு பாவிப்பதை தான் நிறுத்தவதாக 2008ல் இந்திய அரசு அறிவித்தது.
ஆனால் அறிவித்தமைக்கு மாறாக தொடர்ந்தும் இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகளை சொந்த மக்கள் மீதே பாவிக்கிறது.
உலக மனிதவுரிமையாளர்களின் கடும் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் தடை செய்யப்பட்ட பெல்லட் குண்டுகளை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
தமிழக மக்கள் இதற்கு எதிராக தமது குரல்களை உயர்த்த வேண்டும். ஏனெனில் நாளை இதே குண்டுகள் தமிழக மக்கள் மீதும் பயன்படுத்தப்படும் ஆபத்து இருக்கிறது.
இங்கு வேடிக்கை என்னவெனில், தனது சொந்த நாட்டு ஒரு வயதுக் குழந்தையையே சுட்டுக் கொல்லும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இன்னமும் சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment