Friday, February 28, 2020
• ராக்கிங் அல்லது பகிடிவதை
• ராக்கிங் அல்லது பகிடிவதை
ராக்கிங்க்கு யார் பகிடிவதை என்று மொழிபெயர்ப்பு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் வதை எப்படி பகிடியாக இருக்க முடியும்?
இந்த ராக்கிங் என்பது ஒரு இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரம். ஆனால் எந்த நாடுகளில் இருந்து இது இறக்குமதி செய்யப்பட்டதோ அந்த நாடுகளில் இப்பொழுது இது இல்லை.
ஒவ்வொரு வருடமும் ராக்கிங் காலங்களில் இதை ஒழிக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் இன்றுவரை ஒழிக்கப்படவில்லை.
இயக்கங்கள் பலமாக இருந்த காலத்தில்கூட இந்த ராக்கிங் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்க முடியவில்லை. அது மறைமுகமாக இருந்தது.
இப்போது இயக்கங்கள் இல்லை. அதுமட்டுமல்ல தகவல் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. எனவேதான் ராக்கிங் வடிவமும் மாறியுள்ளது.
இன்று சில மாணவர்கள் நிர்வாண போட்டோ அனுப்புமாறு மாணவியிடம் கேட்டதை அதிர்ச்சியுடன் பலரும் கண்டித்து வருகின்றனர்.
ஆனால் சில மாணவிகளே சக மாணவிகளை இதைவிட கொரூரமாக ராக்கிங் செய்து வருவதை இவர்கள் அறியவில்லை போலும்.
இந்த ராகிங்கை நிறுத்த வேண்டும் என்று மாணவர்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் உண்மையாகவே இன்னும் உணரவில்லை.
குறிப்பாக புதிய மாணவர்களை கட்டுப்படுத்தவும் தமக்கு கீழ்படிந்து நடக்கவும் ராகிங் வேண்டும் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் எண்ணுகிறார்கள்.
தாம் அனுபவித்த ராக்க்pங்கை அடுத்த வருட்ம் வரும் புதிய மாணவர்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என்று பழைய மாணவர்கள் நினைக்கிறார்கள்.
1984ம் ஆண்டு எமது கரவெட்டி கிராமத்தில் ஒரு ஏழை மாணவன் யாழ் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டான்.
அவனை ராக்கிங் செய்ய சில மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கரவெட்டிக்கே வந்திருந்தனர். இதை அறிந்த நான் அவர்களை விரட்டிவிட்டேன்.
ஆனால் வேதனை என்னவென்றால் எந்த மாணவனுக்காக அவர்களை விரட்டிவிட்டேனோ அந்த மாணவனே அடுத்த வருடம் முன்நின்று ராக்கிங் செய்தான்.
எனவே ராக்கிங் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை எப்படி நிறுத்த வேண்டும் எனபதில்தான் மாறுபட்ட கருத்துகள் வருகின்றன.
இதில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் தண்டனை வழங்குவதன் மூலம் நிறுத்த முடியும் என சிலர் கருதுகின்றனர். அது வெற்றியளிக்கும் என்று தோன்றவில்லை.
மாறாக மேலைநாடுகளில் இது எப்படி நிறுத்தப்பட்டது என்பதை கண்டறிந்து அதில் இருந்து ஒரு வழிமுறையை மேற்கொள்ள வேண்டும்.
இது தமிழ் மாணவர்களுக்கான பிரச்சனை மட்டும் இல்லை. சிங்கள மாணவர்களுக்கும் இதே பிரச்சனை இருக்கிறது.
Image may contain: one or more people
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment