Friday, February 28, 2020
•இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
•இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
ஒருவர் தமிழ் மக்கள் மத்தியில் வந்து என்னை நீங்கள் தெரிவு செய்தால் உங்களுக்கு ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றார்.
தமிழ் மக்களும் அவர் வாக்குறுதியை நம்பி அவரை எம்.பி யாக தெரிவு செய்கின்றனர்.
அவரும் தன் பொக்கற்றைக் காட்டி “ இதோ என் ராஜினாமாக் கடிதம். பொக்கற்றில் தயாராக இருக்கிறது. தீர்வு பெற்று தரவில்லை என்றால் உடனடியாக ராஜினாமா செய்வேன்” என்றார்.
பதவி பெற்றதும் “நடந்தது இனப்படுகொலை அல்ல. அது வெறும் போர்க்குற்றம் மட்டுமே” என்றார்.
அதன்பின்பு “சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும்” என்றார்.
அதுமட்டுமன்றி இலங்கை அரசு கோராமலே இரண்டுமுறை தவணை பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்றவர் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது இனப்படுகொலை என்றும் அது விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.
இந்நிலையில்தான் தமிழ் மக்கள் இவரது துரோகத்தனதிற்கு எதிராக கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
ஆனால் சிலர் கொஞ்சம்கூட கூச்சமின்றி அவருடன் சேர்ந்து சாப்பிட்டு படம் பிடித்து முகநூலில் பெருமையாக போடுகின்றனர்.
பாவம். அவர்களுக்கும் பசிக்கும்ல்லே.
அவர்களுடைய சில வாதங்களும் அவற்றுக்கான பதில்களும்
(1) சுமந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா?
பதில் - பிரதமர் மோடி ஜனாதிபதி ட்ரம்ப் எல்லோரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே. ஆனால் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும்போது இப்படி யாரும் கூறவதில்லை என்பதை இவர்கள் கவனிக்க வேண்டும்.
(2) சுமந்திரன் தன் கருத்தை சொல்ல அனுமதிக்க வேண்டாமா?
பதில் - ஆம். சுமந்திரன் தன் கருத்தை சொல்ல எந்தளவு உரிமை உண்டோ அதேயளவு உரிமை அவருடைய துரோகத்தனத்pற்கு எதிர்ப்பு தெரிக்க மக்களுக்கும் உண்டு.
(3) பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் மீது செருப்பு எறிவோம் என்று கூறுவது தவறு இல்லையா?
பதில் - உலகின் பெரிய ஜனநாயகநாடு அமெரிக்கா என்கிறார்கள். அந்த அமெரிக்காவின் ஜனாதிபதிகளே உலகில் அதிகளவு எதிர்ப்பு போராட்டங்களை சந்தித்துள்ளார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஈராக் சென்றபோது ஒரு ஊடகவியலாளரே செருப்பு வீசினார். அதை யாரும் தவறு என்று கூறுவதில்லை. அமெரிக்க தேசியக்கொடி பல இடங்களில் எரிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட எதிர்ப்பு வடிவமே.
(4) சுமந்திரனை குறைகூறும் நீங்கள் என்ன சாதித்துள்ளீர்கள்?
பதில் - சுமந்திரனைவிட அதிகம் சாதித்தவர்தான் சுமந்திரனை கேள்வி கேட்க முடியும் என கருதுவது தவறு. தமிழ் மக்கள் அனைவருக்கும் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் உண்டு. அத்துடன் சுமந்திரன்தானே மக்களை ஏமாற்றி பதவி பெற்றிருக்கிறார். எனவே அவரிடம்தானே கேட்க வேண்டும்.
Image may contain: 1 person, eating, sitting, table and food
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment