Friday, February 28, 2020
நாய் நன்றியுள்ள மிருகம்தான்.
நாய் நன்றியுள்ள மிருகம்தான். ஆனால்
அது தன் இனத்திற்கு விசுவாசமாக இருப்பதில்லை
அது எப்போதும் இறைச்சித்துண்டுக்காக வாலாட்டும்
அது எலும்புத் துண்டை வீசும் எஜமானுக்கு விசுவாசமாக இருக்கும்.
அது நடுக்கடலில் போனாலும் நக்கித்தான் குடிக்கும்
எனவே அதற்கு “கம்பவாணர் அருணகிரிநாதர்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது
அதென்ன “கம்பவாணர் அருணகிரிநாதர்” ? அப்பாவியாய் கேட்டான் ஒருவன்.
அப்படியென்றால் “தரம் மிக்க போராளி” என்று பொருளாம் என்றேன் நான்.
“அடி செருப்பாலே நாயே” என்றான் அந்த ஒருவன் கோபத்தோடு.
யார்ரா இவன் ரொம்ப கோவக்காரனாக இருக்கிறான்? என்று நினைத்தபடி மௌனமானேன் நான்..
குறிப்பு - இதை படிக்கும்போது சுமந்திரன் நினைவுக்கு வந்தால் அதற்கு கம்பனி பொறுப்பு இல்லை.
Image may contain: 1 person, sitting and dog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment