Friday, February 28, 2020

முருகதாசன் மரணம்

முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை.மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்டார்கள். போரை நிறுத்துமாறு தமிழகத்தில் முத்துக்குமார் உட்பட 16 பேர் தீயிட்டு தற்கொலை செய்தார்கள். ஆனால் இந்திய அரசு அதனை கண்டுகொள்ளவும் இல்லை. போரை நிறுத்தவும் இல்லை. மாறாக தமிழின அழிப்பிற்கு பெரும் உதவி புரிந்தது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றினார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக அதன்பின்னரே கொடிய கிளாஸ்ரர் குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். போரை நிறுத்தூமாறு கோரி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் , சாலை மறியல் செய்தார்கள். சங்கிலி போராட்ம் நடத்தினார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். வெளிநாட்டு அரசுகளிடம் மன்றாடினார்கள். மனிதவுரிமை அமைப்பகளிடம் கரம் கூப்பி வேண்டினார்கள். அனைத்து சாத்வீக வழிகளிலும் மக்கள் கேட்டார்கள். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் அழிவு தடுக்கப்படவில்லை. ஆயுதம் தூக்கினால் அது பயங்கரவாதம் என்றவர்கள், மக்கள் ஜனநாயகவழியில் சாத்வீக முறையில் போராடிய போது கண்டு கொள்ளவில்லையே. இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது அகிம்சையை போதித்த இந்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. அன்னைபூபதி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் ஒரு பெண் என்றுகூட இந்திய அரசு இரங்கவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் இரோம் சார்மிளா என்ற பெண்மணி 15 வருடமாக உண்ணாவிரதம் இருந்தார் இந்திய அரசு மட்டுமல்ல உலகில் எந்த அரசுமே கண்டுகொள்ளவில்லை. புலிகள் ஆயுத பலத்தோடு இருந்தபோது தமிழீழம் தவிர அனைத்தையும் தருவதாக கூறிய சந்திரிக்கா பண்டாரநாயக்கா இப்பொது புலிகள் இல்லை என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்று கூறகிறார். இதன் அர்த்தம் அதிகாரத்தை பெறுவதில் துப்பாக்கிகள் தீர்மானிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன? புலிகள் வெல்லவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்று சிலர் கூற முற்படுகிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும் கூறுகிறார்கள். அவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம், கோப்பாப்பிலவில் மக்கள் அமைதியாக அகிம்சை வழியில் தானே போராடுகிறார்கள். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லையே? காணாமல் போனவர்களின் உறவுகள் அமைதியாக அகிம்சை வழியில் தானே 900 நாளாக போராடுகிறார்கள். அவர்களை அரசு ஏமாற்றிவிட்டதே? அகிம்சை வழியில் தீர்வு பெற முடியும் என்பவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடி தமது சொந்த நிலத்தையே திருப்பி பெற முடியாத தமிழ் மக்களுக்கு அகிம்சை வழியில் போராடினால் சமஸ்டி தீர்வு கிடைத்துவிடுமா? இன்று தமிழ் இனவிடுதலைக்காக சிலர் தேர்தல் பாதையை முன்வைக்கிறார்கள். அவர்கள் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என மக்களை நம்பவைக்க முயல்கிறார்கள். ஆனால் "துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது" என்றும் "ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதை மூலமே விடுதலை அடைய முடியும்" என்று மாபெரும் ஆசான் மாசேதுங் கூறியுள்ளார். அதுவே இன்றும்கூட பொருத்தமாக உள்ளது என்பதே உண்மையாகும். Image may contain: 1 person

No comments:

Post a Comment