Friday, February 28, 2020
லக்ஸ்மன் கதிர்காமரும் சின்ன கதிர்காமரும்!
• லக்ஸ்மன் கதிர்காமரும் சின்ன கதிர்காமரும்!
லக்ஸ்மன் கதிர்காமர் என்ற ஒரு தமிழர் சந்திரிக்கா அரசில் அமைச்சராக இருந்தார்.
அவரது வேலை, சந்திரிக்காவின் ராணுவம் பாடசாலை மீது குண்டு போட்டு மாணவர்கள் இறந்தால் அவர்களை புலிப் பயங்கரவாதிகள் என்று சர்வதேசத்திற்கு கூறுவது, தேவாலயம் மீது குண்டு போட்டால் அது புலிகளின் முகாம் என்று பொய் கூறுவது.
அதனால் தமிழ் மக்கள் இவரை வெறுத்தார்கள். இவரை துரோகி என்று அழைத்தார்கள்.
ஆனாலும் அவருக்கு ஒரு ஆசை இருந்தது. தமிழ் மக்கள் தன்னை பாராட்ட வேண்டும் என்று விரும்பினார்.
தன் விருப்பத்தை அவர் சந்திரிக்காவிடம் தெரிவித்தார். சந்திரிக்காவும் அவர் இறுதி விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார்.
அப்போது அருகில் இருந்த சம்பந்தர் ஜயா “ மேடம்! கவலைப் படாதீர்கள். இது ஒரு சின்ன விடயம். நான் நிறைவேற்றிக் காட்டுகிறேன் “ என்றார்.
சம்பந்தர் ஜயா சுமந்திரனை அழைத்து அவருக்கு பதிவியைக் கொடுத்தார். அவரும் பதவி கிடைத்ததும் நடந்தது இனப்படுகொலை அல்ல என்றார். அடுத்து சர்வதேச விசாரணை தேவையில்லை, உள்ளக விசாரணை போதும் என்றார். அதன் பின்னர் இலங்கை அரசு கோராமலேயே இரண்டு முறை தவணை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் புலிகளின் கொலைகளும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றார். தமிழ் இனப் படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்றவர் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது இனப்படுகொலை என்றும் அதை விசாரிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இதனைப் பார்த்த தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதுமட்டுமல்ல இவருடன் ஒப்பிடும்போது லக்ஸ்மன் கதிர்காமர் பரவாயில்லை என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட சந்திரிக்கா மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தமிழ் மக்களின் வாயாலேயே லக்ஸ்மன் கதிர்காமர் பரவாயில்லை என்று கூறவைத்துவிட்டீர்களே என்று சம்பந்தர் ஜயாவை கட்டியணைத்து பாராட்டினார்.
குறிப்பு -
நண்பர் - தோழர்! சுமந்திரன் செம்பு ஒன்று உங்களை “பன்னாடை” என்று எழுதியிருக்குது.
நான் - அப்படியா? சரியாகத்தானே சொல்லியிருக்கு.
நண்பர் - எப்படி தோழர்?
நான் - சுமந்திரன் என்ற சக்கையை வடித்து மக்களுக்கு நான் இனம் காட்டுவதால் அவர் என்னை பன்னாடை என்கிறார்.
Image may contain: 1 person, suit
Image may contain: 1 person
143You, Gowripal Sathiri Sri, Gauri Suki and 140 others
17 comments
65 share
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment