Sunday, May 28, 2023
மறக்க முடியாத மகேந்திரன்
• மறக்க முடியாத மகேந்திரன்
கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்ட தோழர் நெப்போலியன் தமிழ்நாடு விடுதலைப்படையினருக்கு உதவியதற்காக இந்திய உளவுப்படையினரால் மலையகத்தில் கொல்லப்பட்டது யாவரும் அறிந்ததே.
அந்த தோழர் நெப்போலியனின் சகோதரரே மகேந்திரன்.
இவர் ரொம்பவும் சாந்தமானவர். அமைதியானவர். அகிம்சையை போதிப்பார்.
அதனால் இவரை கிண்டலாக (தந்தை) செல்வநாயகம் என்று நாம் அழைப்பதுண்டு.
அமைதிப்படை என்று வந்த இந்திய ராணுவத்தால் நெடுங்கேணி மக்கள் பாதிக்கப்பட்டபோது ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது உழவு இயந்திரத்தில் உணவு எடுத்துச் சென்றார் மகேந்திரன்.
அப்போது ஹெலிகப்டரில் வந்த இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மகேந்திரனும் அவருடன் சென்ற ஊர் மக்கள் சிலரும் கொல்லப்பட்டனர்.
அப்பாவி மக்களை கொன்றது மட்டுமன்றி பயங்கரவாதிகளை கொன்றதாக இந்திய ராணுவம் தனது வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவித்தது.
இங்கு இப்போது இதை சுட்டிக்காட்டுவதன் நோக்கம் மே மாதம் வந்தால் சிலர் ராஜீவ் காந்தி கொலை பற்றி பேசுவார்கள்.
அவர்களிடம் நான் கேட்க விரும்புவது ராஜீவ் காந்தி உயிர் மட்டும்தான் உயிரா? அவரால் கொல்லப்பட்ட பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழரின் உயிர் என்ன மயிரா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment