இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெறுவது.
நாம் மீண்டும் எழுவது அழுது புரள்வதற்காக அல்ல. எமக்குரிய நீதியைப் பெறுவதற்காக.
ஓட முடியுமென்றால் ஓடு. ஓட முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல். ஆனால் ஒருபோதும் இயங்குவதை நிறுத்திவிடாதே.
ஏனெனில் ஓடாத மானும் போராட இனமும் வாழ முடியாது. அழிந்துவிடும்.
நாம் மீண்டும் எழுவோம் என்றதும் சிங்கள அரசுக்கும் இந்திய அரசுக்கும் வரும் எரிச்சலைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் எம் தமிழர் சிலர் எரிச்சல் அடைவதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவர்களுக்கு எப்படி எம் நியாயத்தை புரியவைப்பது?
No comments:
Post a Comment