Saturday, August 31, 2024
70களில் நெல்லியடியில் ஒரு
70களில் நெல்லியடியில் ஒரு மனநோயாளி இருந்தார். அவர் பெயர் பத்மநாதன்.
அவர் எப்போதும் “ நதி எங்கே போகிறது கடலைத்தேடி. நான் எங்கே போகிறேன் சரோஜாதேவியைத் தேடி” என பாட்டு பாடுவார்.
அதாவது தன்னை திருமணம் செய்ய நடிகை சரோஜாதேவி வரப்போகிறார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
அதுபோல் இப்ப ஒருவர் சென்னையில் இருக்கிறார்.
அவர் முதலில் துவாரகா வருகிறார் என பாட்டு பாடினார்.
அடுத்து நவம்பரில் பிரபாகரன் வரப்போகிறார் என்கிறார்.
பாவம் பத்மநாதனுக்கு சிகிச்சையளிக்க யாரும் இருக்கவில்லை.
ஆனால் இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. அதுவும் மருத்துவர்களாக இருக்கின்றனர்.
ஒரு மகள் லண்டனில் மருத்துவராக இருக்கிறார். இன்னொரு மகள் அவுஸ்ரேலியாவில் மருத்துவராக இருக்கிறார்.
மற்றவர்களுடைய வீட்டு பிள்ளைகளை |போராட்டத்திற்கு வருமாறு பாட்டுபாடிய இந்த உணர்சிக் கவிஞர் தன் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பவில்லை.
மாறாக இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் சேர்த்து மருத்தவராக்கினார்.
ஆனால் அப் பிள்ளைகள் இன்று தம் வயதான தந்தைக்கு சிகிச்சையளிக்காமல் இருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment