Saturday, August 31, 2024
இருவரும் ஈழத் தமிழர்கள்.
இருவரும் ஈழத் தமிழர்கள்.
ஒருவர் செல்வி மேனகா. லண்டனில் இருக்கிறார்.
இன்னொருவர் செல்வி திரித்துஷா. தமிழ்நாட்டில் மதுரை அகதி முகாமில் இருக்கிறார்.
செல்வி மேனகா உலகப் பிரசித்தி பெற்ற ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செல்வி மேனகாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
செல்வி திரிதுஷா தமிழ்நாட்டில் சிறந்த புள்ளிகள் பெற்று பலரின் பாராட்டைப்; பெற்றுள்ளார்.
ஆனாலும் தான் மருத்துவம் படிக்க விரும்பியதாகவும் தமிழ் நாட்டில் அகதிகள் மருத்துவம் படிக்க அனுமதி இல்லை என்பதால் தன்னால் தன் விருப்படி படிக்க முடியவில்லை என கூறுகின்றார்.
தமிழ்நாட்டில் அகதி மாணவர்கள் மருத்துவம் படிக்க அனுமதிக்கும் காலம் எப்ப வரும்?
இதைப் படித்ததும் காசி அனந்தனின் இரு மகள்களும் எப்படி தமிழ் நாபட்டில் மருத்துவம் கற்றனர் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றக்கூடும்.
தயவு செய்து அதை அவரிடமே கேட்டு மற்ற அகதிகளும் மருத்துவம் கற்க வழி செய்யுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment