Saturday, August 31, 2024
தோழர் தமிழரசனும் தோழர் நெப்போலியனும்
•தோழர் தமிழரசனும் தோழர் நெப்போலியனும்
தோழர் நெப்போலியன் ஈழத்தில் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர். அவரின் இயற் பெயர் மனோகரன்
1984ல் தோழர் தமிழரசன் பெண்ணாடத்தில் நடத்திய மாநாட்டில் எமது அமைப்பின் சார்பில் தோழர் நெப்போலியன் கலந்துகொண்டார்.
தோழர் நெப்போலியன் கேட்டுக்கொண்டதற்கிணங்க எமது அமைப்பு தோழர்களுக்கு மலையாளப்பட்டி என்னும் இடத்தில் தோழர் தமிழரசன், புலவர், சுந்தரம் ஆகியோர் மார்க்சிய தத்துவங்களை போதித்தனர்.
வாடிப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த எமது பயிற்சி முகாமில் தோழர் தமிழரசன் மற்றும் அவரது தோழர்களுக்கு தோழர் நெப்போலியனே ஆயுதப் பயிற்சி வழங்கினார்.
பயிற்சி வழங்கியது மட்டுமன்றி தோழர் தமிழரசனுக்கு ஆயுதங்களும் கொடுத்து உதவினார் தோழர் நெப்போலியன்.
இதனை அறிந்துகொண்ட இந்திய உளவு அமைப்பு ஈரோஸ் இயக்கத்தின் மூலம் மலையகத்தில் வைத்து தோழர் நெப்போலியனைக் கொன்றது.
தோழர் நெப்போலியன் மலையகம் சென்று மலையக மக்களுக்காக மலையக மக்கள் விடுதலை முன்னணி(ULO) என்ற அமைப்பை உருவாக்கி போராடியிருந்தார்.
யாழ்ப்பாணத்தவர்கள் மலையக மக்கள் பற்றி அக்கறை கொள்வதில்லை என்று இன்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையக மக்களுக்காக போராடி மடிந்த தோழர் நெப்போலியனை பதிலாக கூற விரும்புகிறேன்.
செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment