Saturday, August 31, 2024
தோழர் தமிழரசனும் தோழர் ராயுவும்
• தோழர் தமிழரசனும் தோழர் ராயுவும்
தாக்குதல்களில் உதவி பெறுவதற்காகவும் குறிப்பாக வாகனங்கள் ஓட்டுவதற்காகவும் எமது தோழர் ராயுவை தன்னுடன் அழைத்துச் சென்றார் தோழர் தமிழரசன்.
தோழர் ராயு கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்தவர். அவருக்கு எமது அமைப்பில் பெயர் ராயு.
ஆனால் தோழர் தமிழரசன் தன்னுடன் அழைத்துச் சென்றபோது அவருக்கு வைத்த பெயர் தினேஸ்.
தோழர் தமிழரசன் மேற்கொண்ட மருதையாற்று பால வெடி குண்டு தாக்குதலில் பெரும் பங்கு வகித்தவர் இந்த தினேஸ்.
அதுமட்டுமன்றி காவிரி அணையை தகர்க்க வேண்டும் என்ற தோழர் தமிழரசன் விருப்பத்திற்கு உரிய திட்டங்களை வகுத்தக் கொடுத்தவரும் இந்த தினேஸ்தான்.
அடுத்து உட்கோட்டையில் தோழர் தமிழரசன் வங்கியில் பணப் பறிப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது வாகனத்தை ஓட்டிச் சென்றவர் தினேஸ்.
அச் சம்பவத்தில் தோழர் தமிழரசன் குழுவினரை மக்கள் சுற்றிவளைத்தபோது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் கிரினைட் குண்டை வெடிக்க வைத்தும் மக்களை பின்வாங்க வைத்து தோழர் தமிழரசனை காப்பாற்றியவர் தினேஸ்.
அதன் பின்னர் பொன்பரப்பி வங்கியில் பணப் பறிப்பு செய்ய சயிக்கிளில் செல்வது என தோழர் தமிழரசன் தீர்மானித்தபோது வேண்டாம். அது ஆபத்தானது என தினேஸ் தடுத்தார்.
ஆனால் தோழர் தர்மலிங்கம் “ ஈழத்தில் நீங்கள் சயிக்கிளில் சென்று பணப் பறிப்பு செய்கிறீர்கள். இங்கு எம்மால் செய்ய முடியாதா?” எனக் கேட்டு சயிக்கிளில் செல்ல வேண்டும் என தோழர் தமிழரசனிடம் வற்புறுத்தினார்.
தோழர் தர்மலிங்கத்தின் பேச்சைக் கேட்டு பணப்பறிப்பு நடவடிக்கைக்கு சயிக்கிளில் செல்வது என்று தோழர் தமிழரசன் முடிவெடுத்தார்.
அத்துடன் சயிக்கிளில் செல்வதால் தினேஸ் தம்முடன் கூட வரத்தேவையில்லை என்றும் தோழர் தமிழரசன் கூறினார்.
தோழர் தமிழரசனின் இந்த முடிவு உளவுப்படையினருக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
தினேஸ் கூறியபடி காரில் சென்றிருந்தால் உட்கோட்டையில் காப்பாற்றியதுபோல் பொன்பரப்பியிலும் தோழர் தமிழரசனை நிச்சயம் தினேஸ் காப்பாற்றியிருப்பார்.
செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment