• தோழர் தமிழரசன் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் எனக் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?
இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வச+லிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபா குறைக்கப்படவிருக்கிறது.
மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபா குறைக்கப்படவிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மத்திய அரசுக்கு 57000கோடி ரூபா வழங்கி வருகிறது.
அதேவேளை தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது. அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழக்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
வருடம் 57000கோடி ரூபாவை தமிழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு அந்த பணத்தில் இருந்தே தமிழக மீனவனை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது.
தமிழகத்தில் இருந்து பெற்றக் கொள்ளும் நிதியில் இருந்தே தமிழர்களை கொன்றொழித்த இலங்கை ராணவத்திற்க மத்திய அரசு உதவி வழங்கிவருகிறது.
தமிழகத்தில் தமிழர்களிடமிருந்து பெறப்படும் நிதியில் இருந்தே இந்திய அரசு இலங்கை அரசின் துண்டு விழும் பட்ஜட் நிதிக்கு கடன் கொடுத்து காப்பாற்றுகின்றது.
எனவே இந்திய அரசின் கீழ் இருப்பதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக நட்டமே ஏற்படுகிறது.
எனவே இந்திய அரசிடமிருந்து தமிழகம் விடுதலை பெற்றால் 57000கோடி ரூபாவையும் தமிழக வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் அல்லவா!
தமிழகம் விடுதலை அடைந்தால்
தமிழக கடனை முற்றாக நீக்க முடியும்.
ஈழத் தமிழர்களையும் காப்பாற்ற முடியும்.
தமிழக கடனை முற்றாக நீக்க முடியும்.
ஈழத் தமிழர்களையும் காப்பாற்ற முடியும்.
இதனையே அன்று தோழர் தமிழரசன் சிந்தித்தார். அவர் அவ்வாறு சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது?
தமிழன் அடிமை நிலையில் இருக்கிறான். அவன் விடுதலை பெற வேண்டும் என அவர் குரல் கொடுத்தது தவறா?
அவ்வாறு கேட்டதற்காக தோழர் தமிழரசனை இந்திய அரசு அடித்துக்கொல்ல வேண்டுமா?
No comments:
Post a Comment