Monday, August 31, 2015

தவிச்ச முயல்

 தவிச்ச முயல்
லண்டனில் லூசியம்சிவன் கோவில் மண்டபத்தில் 30.05.2015 யன்று ந. வினோதரன் எழுதிய "தவிச்சமுயல்" நூல் வெளியீடு இடம்பெற்றது.
என். கெங்காதரன் அவர்களின் தலைமையில் இந் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
திருவேணி சதீஸ் அவர்கள் அறிமுகவுரை வழங்கினார்கள்.
மு.நித்தியானந்தன், எம்.பௌசர், ராஜினி நடராசா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியாக நூல் ஆசிரியர் ந. வினோதரன் ஏற்புரை வழங்கினார்.
நூல் ஆசிரியர் வினோதரன் அவர்கள் தனது கிராமத்து மண் வாசனையுடன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே "தவிச்சமுயல்" ஆகும்.
போர் தந்த வலிகள், அம் மக்கள் அனுபவித்த வேதனைகள் அவரது கிராமத்து மண் வாசனையுடன் பதிவு செய்ய முயன்றுள்ளார்.
தற்போது லண்;டனில் வசிக்கும் நாலாசிரியர் தனது முன்னுரையில் " அகதியாக உலகெல்லாம் ஓடி ஓடி உலைந்தாலும் இந்த பிறப்புணர்வு மறுக்கும் யாருடனும் மண்டியிட்டு சமரசப்படவும் முடியவில்லையே!" என குறிப்பிட்டுள்ளார்.
அவரிடமிருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment