• சிறப்புமுகாம்களை மூடக்கோரி வேல்முருகன் போராடுகிறார்.
மற்ற தலைவர்களும் இதேபோல் போராடுவார்களா?
அகதிகளுக்கு இனியாவது விடுதலை கிடைக்குமா?
மற்ற தலைவர்களும் இதேபோல் போராடுவார்களா?
அகதிகளுக்கு இனியாவது விடுதலை கிடைக்குமா?
தமிழகத்தில் சிறப்புமுகாம்களை உடனடியாக மூடி அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளார்.
திருச்சி சிறப்புமுகாமை முற்றுகையிட்ட வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து 1252பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெட்டவார்த்தையில் திட்டிய அதிகாரி -
இந்த போராட்டத்தின் போது காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர்,முன்னாள் எம்.எல்.ஏ..காவேரியை பார்த்து ஹிந்தியில் மொழியில் கெட்ட வார்த்தையில் திட்டினார். இதனால் வாழ்வுரிமை கட்சியினருக்கும், துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூருக்கும் இடையே பயங்கர வாக்கு வாதம் ஏற்பட்டது.
ஒரு முன்னாள் எம்.எல்.ஏ யையே கெட்ட வார்த்தைகளால் இந்த காவல்துறை அதிகாரிகள் திட்டுகிறார்கள் எனில் கேட்பதற்கு யாருமற்ற அகதிகளை எப்படி திட்டுவார்கள் என்பதை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
இந்த அவல நிலையில் இருந்து அகதிகள் விடுதலை பெறவேண்டும். சிறப்புமுகாம் கொடுமைகள் முற்றுப்பெற வேண்டும்.
இவ்வேளையில் அனைத்து தலைவர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஈழத் தமிழர்களின் தலைவர்களான சம்பந்தர் அய்யா மாவை சேனாதிராசா போன்றவர்கள் இதற்காக மத்திய மாநில அரசுகளுடன் பேச வேண்டும்.
No comments:
Post a Comment