• லண்டனில் நடைபெற்ற இரு நிகழ்வுகள்
லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் 25.07.2015 யன்று "தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் " சார்பில் இரு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ந.சுசீந்திரன் வழிப்படுத்தலில் முதல் நிகழ்வாக தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்திருந்த கவிஞர் திலகபாமா உரையாற்றினார். சமூக செயற்பாட்டாளரான திலகபாமா தனது உரையில் பெண் எழுத்தும் எழுத்தின் அரசியலும் பற்றிக் குறிப்பிட்டார்.
இரண்டாம் நிகழ்வாக பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் உரையாற்றினார். இவர் அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழக திரைப்படத்துறை பேராசிரியராவார். இவர் தனது உரையில் "தேடலும் வாசிப்பும் திரைப்படங்களை முன்வைத்து" உரையாற்றினார்.
இறுதியாக வந்திருந்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுசீந்திரன் திறம்பட வழி நடத்தினார். உரையாற்றியவர்கள் சுருக்கமாக அதே நேரம் பொருள் பொதிந்த உரையை வழங்கினார்கள். உண்மையிலே ஒரு நல்ல நிகழ்வாக இது அமைந்தது.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் பணி பாராட்டுக்குரியது.
அவதானிப்பு:-
ஈஸ்ட்காம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் அவர்கள் கவிஞர் திலகபாமா அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
தனது ஈஸ்ட்காம் நகருக்கு வருகை தரும் தமிழர்களை கௌரவிப்பதில் போல் சத்தியநேசன் அவர்கள் எப்போதும் முன் நிற்பவர். ஆனால் இந்த பொன்னாடை போர்த்தும் கலாச்சாரம் லண்டனுக்கு தேவையில்லை என நாம் கருதுகிறோம். இதை கவுன்சிலர் கவனத்தில் எடுப்பார் என நம்புகிறோம்.
No comments:
Post a Comment