Monday, August 31, 2015

இந்தியாவில் கருத்துரிமை இல்லையா?

 இந்தியாவில் கருத்துரிமை இல்லையா?
பெண்ணாடத்தில் ஈகையர் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி பெற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென்று காவல்துறை மாநாட்டிற்கு தடை விதித்துள்ளது.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த ஈகையர்களுக்கு நினைவுகூர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது என்ன நியாயம்? இதுதான் இந்திய ஜனநாயகமா?
தோழர் தமிழரசனைக் கொன்றுவிட்டு அவரது பாதையை அழித்துவிட்டதாக காவல்துறையினர் கனவு கண்டனர். ஆனால் இன்று ஆயிரமாயிரம் தமிழரசன்கள் உருவாகி அவரது பாதையில் பயணிக்கின்றார்கள்.
இது தமிழக காவல்துறைக்கு நடுக்கத்தைத் தோற்றுவித்துள்ளது. எனவேதான் அவசர அவசரமாக மாநாட்டை தடை செய்துள்ளார்கள்.
மாநாட்டை தடைசெய்வதால் ஈகையர் நினைவுகளை மக்களிடமிருந்து அகற்றிவிடலாம் என காவல்துறை நினைக்கிறது. ஆனால் மக்கள் இன்னும் பன்மடங்கு ஈகையர்களை போற்றுவார்கள்.
இறுதியாக ஒரு குறிப்பு- மாநாட்டை தடை செய்த தமிழக காவல்துறையினருக்கு நன்றிகள். ஏனெனில் மாநாடு நடைபெற்றிருந்தால் தமிழ்நாட்டில் மட்டுமே அதுகுறித்து தெரிந்திருக்கும். ஆனால் அதை தடை செய்ததன் மூலம் இந்தியாவெங்கும் அல்ல உலகத்திற்கே தெரியப்படுத்தியுள்ளார்.
எனவே ஓசி விளம்பரம் தந்த தமிழக காவல்துறையினருக்கு நன்றி. நன்றி. நன்றி.

No comments:

Post a Comment