• தன்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்- மாமேதை காரல் மாக்ஸ்
தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர்
தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்
தமிழ் மக்களுக்காக தன் உயிரை அர்ப்பணித்தவர்
அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் !
தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்
தமிழ் மக்களுக்காக தன் உயிரை அர்ப்பணித்தவர்
அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் !
மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு மா, மா என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று.
தமிழக மாடுகளும் மன்னிக்கவும் மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள்.
ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை.
எனவேதான் "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்" என்று தோழர் தமிழரசன் கூறினார்.
தமிழக மக்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்று கூறியதாலேயே தோழர் தமிழரசன் தமிழக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசனைக் கொன்று விட்டு தமிழக விடுதலையை நசுக்கி விட்டதாக தமிழக அரசும் அதன் காவல்துறையும் கனவு கண்டது.
ஆனால் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. அவர் விதைக்கப்பட்டார்; என்பதை நிரூபிக்கும் வண்ணம் அவரில் இருந்து அயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத் தெழுந்துள்ளார்கள்.
ஆம். 1984ம் ஆண்டு தமிழரசன் தமிழக விடுதலையை முன்வைத்த அதே பெண்ணாடம் நகரில் அவரின் தோழர்கள் இந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஒன்று கூடுகிறார்கள்.
தமிழின விடுதலையை விரும்புவர்களை அணிதிரண்டு வருமாறு அறைகூவல் விடுக்கின்றனர்.
வாருங்கள் தோழர்களே!
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனை வழிகாட்டலில்
தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதையில் செல்வோம்.
தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதையில் செல்வோம்.
No comments:
Post a Comment