• தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை?
நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைவர்கள் இதுவரை கருத்து கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது.
தான் சாவதற்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என்று டெசோ மாநாடு நடத்தும் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏன் இன்னும் கூறவில்லை?
இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கூறி ஈழத்தாய் பட்டம் பெற்றிருக்கும் ஜெயா அம்மையார் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டவில்லை?
2016ல் சட்டசபையை கைப்பற்றி தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவிருக்கும் "நாம் தமிழர்" சீமான் அவர்கள் அதற்குமுன்னர் ஈழத் தமிழர்கள் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்று கூறக்கூடாதா?
வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எல்லாம் ஏன் மௌனம் காக்கின்றார்கள்?
இவர்களுக்கு ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இல்லையா? அல்லது தமது கூற்றுக்கு எந்த மதிப்பும் ஈழத் தமிழர் மத்தியில் கிடைக்காது என்று எண்ணுகிறார்களா?
இவர்கள் எல்லாம் ஈழத்தமிழருக்கு தமிழீழம் மட்டுமே தீர்வு என்கிறார்கள். ஆனால் தேர்தலில் போட்டி போடும் எந்தவொரு கட்சியுமே தமிழீழ தீர்வை முன்வைக்கவில்லை.
அதுமட்டுமன்றி போட்டி போடும் எந்தவொரு கட்சியுமே தமிழக தலைவர்களின் ஆதரவையோ உதவியையோ இதுவரை கோரவில்லை.
தீக் குளிப்தற்கு தமிழக தமிழர்கள் தேவை
போராடுவதற்கு தமிழக மாணவர்கள் தேவை
ஜ.நா மனுவில் கையொப்பம் இட தமிழகம் தேவை
உலகில் குரல் கொடுக்க தமிழக தலைவர்கள் தேவை.
ஆனால் தேர்தலில் வழிகாட்ட தமிழகம் தேவையில்லையா?
போராடுவதற்கு தமிழக மாணவர்கள் தேவை
ஜ.நா மனுவில் கையொப்பம் இட தமிழகம் தேவை
உலகில் குரல் கொடுக்க தமிழக தலைவர்கள் தேவை.
ஆனால் தேர்தலில் வழிகாட்ட தமிழகம் தேவையில்லையா?
ஈழத் தமிழ் வேட்பாளர்களே! இது நியாயமா?
No comments:
Post a Comment