•தமிழ் மக்கள் கடலில் தத்தளிக்கிறார்கள்.
மாகாண முதல்வர் கலாமுக்கு சிலை திறக்கிறார்
மாகாண முதல்வர் கலாமுக்கு சிலை திறக்கிறார்
அவுஸ்ரேலியா சென்ற தமிழ் அகதிகள் நடுக்கடலில் தத்தளிக்கிறார்கள்.
அவர்களை மீண்டும் நடுக்கடலில் தள்ளிவிட இந்தோனிசிய அரசு முயல்கிறது.
கரையில் இறங்கினால் சுட்டுக் கொல்வோம் என அந்த அரசு மிரட்டுகிறது.
இதை சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புகள் மற்றும் மனிதவுரிமையாளர்கள்; கண்டித்துள்ளனர்.
ஆனால் தமிழ் மக்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் எவரும் இது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.
நமது வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் இந்திய தூதுவருடன் சேர்ந்து அப்துல் கலாமுக்கு சிலை திறந்து மகிழ்கிறார்.
அப்துல் கலாம் தமிழர்தான். ஆனால் அவர் பதவியில் இருக்கும் போது தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.
முள்ளிவாய்க்கால் அவலம் நடக்கும் போது அதற்கு எதிராக குரல்கூட கொடுக்கவில்லை. மாறாக மகிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி விருந்து உண்டார்.
அப்துல்கலாமுக்கு அவர் புதைக்கப்பட்ட இடத்தில்கூட இந்திய அரசு இன்னும் சிலை அமைக்கவில்லை.
இந் நிலையில் எதற்காக அப்துல் கலாமுக்கு யாழ் நூல் நிலையத்தில் சிலை திறக்க வேண்டும்?
முள்ளிவாய்க்கால் அவலம் நடந்த போது அதற்கு எதிராக முத்துக்குமார் உட்பட 16 தமிழ்நாட்டுத் தமிழர்கள் தீக்குளித்து தமது உயிரை அர்ப்பணித்தார்கள்.
அவர்களுக்கு சிலை அமைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களில் ஒருவரின் பெயரைக்கூட நமது மாகாண முதல்வர் இதுவரை உச்சரிக்கவில்லை.
இலங்கை ராணுவத்தின் வாகனம் மோதி நேற்று முன்தினம் ஒரு பெண் மரணம் மடைந்துள்ளார். இன்னொரு பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.
இப்பொழுது யுத்தம் இல்லை. எதற்காக இரணுவம் விபத்து நடக்கும் அளவிற்கு வாகனங்களை விரைவாக ஓட்ட வேண்டும் என்று கெட்க எமக்கு ஒரு தலைவர் இல்லை.
இதைக்கூட தடுத்து நிறுத்த முடியாத நல்லாட்சி ஜனாதிபதி “துரையப்பா சிறந்த ஜனநாயகவாதி” என்று யாழ்ப்பாணம் வந்து எமக்கு போதிக்கின்றார்.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவலத்தை சகித்துக்கொள்வது?
No comments:
Post a Comment