•இந்த அகதிகள் செய்த குற்றம் என்ன?
•எதற்காக இவர்கள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்?
•எதற்காக இவர்கள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்?
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தங்களையும் வாழ வைக்கும் என்று நம்பி வந்ததைத் தவிர இந்த அகதிகள் செய்த குற்றம்தான் என்ன?
தொப்புள் கொடி உறவு என்று நம்பி வந்ததத்திற்கு இந்த கொடுமையான சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில்தான் அடைப்பதா?
உலகில் எங்கு அநியாம் நடந்தாலும் தட்டிக் கேட்கும் மனித உரிமை அமைப்புகள் எல்லாம் இந்த சிறப்புமுகாம் கொடுமையை கேட்காதது ஏன்?
காஸ்மீர் எல்லாம் சென்று உண்மை அறியும் குழுவினர் கூட தமது கண் முன்னே நடக்கும் இந்த சிறப்புமுகாம் கொடுமை குறித்து உண்மை அறிய மறுப்பது ஏன்?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் அகதிகளை மட்டும் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பது ஏன்?
எந்த வழக்கும் இல்லை. எந்த விசாரணையும் இல்லை. எந்த தண்டனையும் இல்லை. ஆனால் இவை எதுவும் இன்றி அகதிகளை அடைத்து வைத்திருப்பது ஏன்?
தண்டனை பெற்ற கைதிக்குகூட தண்டனை முடிய தான் விடுதலை பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கும்.
ஆனால் எப்போது விடுதலை கிடைக்கும் என்று எதுவும் தெரியாமல் அகதிகளை அடைத்து வைத்திருப்பது கொடுமை அல்லவா?
தனது ஆட்சியை தக்க வைப்பதற்காக சிறப்பு முகாமை ஆரம்பித்து அகதிகளை அடைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் சம்பந்தர் அய்யா.
சம்பந்தர் அய்யா ஒவ்வொரு வாரமும் இந்திய தூதுவருடன் தண்ணி விருந்தில் கலந்து கொள்கிறார். அப்போது ஒரு தடவையாவது இந்த சிறப்பு அகதிகளை விடுதலை செய்யுங்கள் என்று அவர் கேட்க விரும்பவில்லை.
மாவை சேனாதிராசா குடும்பத்துடன் சென்னையில் பல வருடமாக வாழ்ந்து வருகிறார். அவரால்கூட இந்த அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க முடியவில்லை.
டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புதுக் கோட்டை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர். சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்தவர். அவரும் இது குறித்து பேசாமல் மௌனமாகவே இருக்கிறார்.
இன்று யாழ்பாணத்தில் இந்திய தூதுவரை பலரும் அழைத்து செல்கிறார்கள். அப்போதாவது சம்பிராதாயக்காகவது சிறப்புமகாம் அகதிகளை விடுதலை செய்யுங்கள் என்று கேட்க ஒருவருக்கும் தோன்றவில்லை.
இப்படி எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதால்தானே தமிழக பொலிஸ் அகதிகளை “அடித்தால் கேட்க யாருமற்ற அகதி நாய்கள்” என்று திட்ட முடிகிறது.
இப்போது திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்கள்.
வழக்கம் போல் அவர்களை ஏமாற்றாது இந்த முறையாவது அந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசும் அதிகாரிகளும் முன் வரவேண்டும்.
No comments:
Post a Comment