•கோடீஸ்வர எம்.பி சரவணபவன் மகளும்
படுகொலை செய்யப்பட்ட ஏழை மாணவி வித்தியாவும்
படுகொலை செய்யப்பட்ட ஏழை மாணவி வித்தியாவும்
முன்னர் சப்றா நிதி நிறுவனம் நடத்தி அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றியவர் சரவணபவன்.
மக்களுக்காக போராடிய பலர் இருக்க இந்த ஏமாற்று பேர்வழிக்கு பாராளுமன்ற பதவியை வழங்கினார் மாவை சேனாதிராசா.
அவர் 6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை பொய் கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்தார்.
மக்களுக்கு சேவை செய்ய வாகனம் தேவைதான். ஆனால் அதற்காக இத்தனை பெறுமதியான சொகுசு வாகனம் தேவையா?
அதைக்கூட மதிப்பு குறைவாக காட்டி சட்டவிரோதமாக மோசடி செய்து இறக்குமதி செய்வது கேவலம் இல்லையா?
புதிய வாகனத்தை இறக்குமதி செய்துவிட்டு பழைய பயன்படுத்திய வாகனம் என பொய் கூறப்பட்டுள்ளது.
லண்டனில் அவ் வாகனத்தின் விலை 1 கோடியே 67 லட்சம். ஆனால் அதன் விலை 88 லட்சம் என பொய் கூறப்பட்டுள்ளது.
Rs 2,652,636 on Customs Import Duty (CID),
Rs 663,159 on Port Aviation Levy (PAL),
Rs 29,488,467 on Excise Import Duty (XID),
Rs. 1,042,928 on Nation Building Tax (NBT)
Rs. 7,821,960 on Value Added Tax (VAT).
Rs 663,159 on Port Aviation Levy (PAL),
Rs 29,488,467 on Excise Import Duty (XID),
Rs. 1,042,928 on Nation Building Tax (NBT)
Rs. 7,821,960 on Value Added Tax (VAT).
6 கோடி பெறுமதியான இந்த சொகுசு வாகனத்திற்கு வரியாக வெறும் 1750 ரூபா மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை விற்று வங்கியில் போட்டால் வட்டியாகவே மாதம் 6 லட்சம் ரூபா வரும். இவர் மட்டுமல்ல இவர் பரம்பரையே எந்த வேலைக்கும் போகாமல் சொகுசாக வாழலாம்.
இப்போது எம்.பி சரவணபவன்ஜனாதிபதி மைத்திரியை அழைத்து தனது மகளுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
கடந்த வருடம் ஏழை மாணவி வித்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுவரை கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை.
அதையடுத்து வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த கொலையாளியும் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஜனாதிபதியை வரவழைத்த சரவணபவன் எம்.பி, இந்த ஏழை மாணவிகளுக்கு நீதி வழங்குமாறு அவரிடம் கோரியிருக்கலாம்.
சரவணபவன் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற மாவை சேனாதிராசா ஜனாதிபதியுடன் விருந்து உண்ட நேரம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கலாம்.
•சிறையில் உள்ள கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை
•சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
•இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
•காணமல் போனவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை
எல்லாவற்றுக்கும் மேலாக புலம் பெயர்ந் மக்கள் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவாவில் ஊர்வலம் போகிறார்கள்.
ஆனால் நாட்டில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை அழைத்து பிறந்தநாள் கொண்டாடி விருந்து உண்ணுகிறார்கள்.
இதை அறிந்தால் மற்ற நாடுகள் எப்படி எம்மை மதிப்பார்கள்?
என்னே கேவலம் இது?
No comments:
Post a Comment