•“துரையப்பா கொலை” ஜனநாயக விரோதமானது என்று கூற ஜனாதிபதி மைத்திரிக்கு தார்மீக ரீதியான தகுதி உண்டா?
ராஜீவ் காந்தி கொலை தவறு என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் ராஜீவ் காந்தியால் ஆறாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது தவறு என்று அவர்கள் கூறுவதில்லை.
துரையப்பா கொலை செய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது என்று சிலர் இன்று கூறுகிறார்கள். ஆனால் துரையப்பாவினால் 7 தமிழர்கள் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டமை தவறு என்று அவர்கள் கூறுவதில்லை.
அமைதிப்படையின் அக்கிரமங்கள் விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கியிருந்தால் ராஜீவ் கொலையை தவிர்த்திருக்க முடியும்.
அதே போன்று யாழ்ப்பாணத்தில் பொலிசார் நடத்திய அக்கிரமங்களை விசாரித்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கியிருந்தால் துரையப்பா கொலையை தவிர்த்திருக்க முடியும்.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொன்றமை இனப் படுகொலையாகும்.
இந்த இனப்படுகொலை குறித்து விசாரிப்பதற்கோ அல்லது சம்பந்தப்பட்ட இனப்படுகொலையாளிகளை தண்டிப்பதற்கோ ஜனாபதி மைத்திரி மறுத்து வருகிறார்.
சர்வதே விசாரணைக்கு மட்டுமன்றி சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்கிய உள்ளக விசாரணைக்கும் அவர் மறுத்து வருகிறார்.
40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களின் படுகொலை ஜனநாயக விரோதமாக ஜனாதிபதி மைத்திரிக்கு தெரியவில்லை. ஆனால் அவர் துரையப்பா கொலை ஜனநாய விரோதமானது என்று கூறுகிறார்.
துரையப்பா தமிழ் மக்களின் நலனுக்கு எதிராக செயற்பட்ட தமது ஆள் என்பதை ஜனாபதி மைத்திரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
துரோகி துரையப்பா கொல்லப்பட வேண்டும் என பெரும்பான்மையான தமிழ் மக்கள் அன்று விரும்பினார்கள்.
அவ்வாறு துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டது சரிதான் என்பதை தமிழ் மக்கள் இன்றும் உணருவதற்கு ஜனாபதியின் பேச்சு உதவியுள்ளது.
துரையப்பா துரோகி என்றும் அவர் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றும் இளைஞர்களை தூண்டி விட்டவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியினரே.
ஆனால் இன்று பழியை புலிகள் மீது போட்டுவிட்டு தாம் நல்லவர்கள் போல் தமிழ்தேச கூட்டமைப்பினர் மௌனமாக இருக்கிறார்கள்.
ஜனாதிபதி மைத்திரி நல்லாட்சி செய்வதாக சம்பந்தர் அய்யா நற்சான்றிதழ் வழங்குகிறார். அவரது ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று சுமந்திரன் தெரிவிக்கிறார்.
இந்த கொடுமைகளுக்கு தமிழ் மக்கள் எப்போது முடிவு கட்டுவது?
No comments:
Post a Comment