•சம்பந்தர் அய்யா அவர்களுக்கு!
திருச்சி சிறப்புமகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் தலைவராக உங்களை நினைத்துக் கொள்ளும் நீங்கள் இதுவரை இந்த தமிழ் அகதிகளுக்காக குரல் கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.
இலங்கையில் கைதிகளின் விடுதலைக்கே “திறப்பு என்னிடம் இல்லை” என்று நக்லாக கூறிய நீங்கள், இந்த சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலைக்கு என்ன கூறுவீர்களோ என்று அச்சமாக இருக்கிறது.
சம்பூரில் அமைக்கப்படும் இந்திய அனல் மின்நிலையத்தை மூடுமாறு கேட்டபோது “இந்தியா போனால் சீனா வந்து விடும்” என்று கூறினீர்கள்.
அதாவது தமிழ் மக்கள் சீன சாம்பலினால் சாவதைவிட இந்திய சாம்பலினால் சாகட்டும் என்று கருதினீர்கள்.
அதேபோல் இந்தியா சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்தால் சீனா பிடித்து தனது சிறப்புமுகாமில் அடைத்துவிடும் என்று நினைக்கிறீர்களா?
அதனால்தான் இதுவரை சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யும்படி நீங்கள் இந்திய அரசிடம் கோரவில்லையா?
இனப் பிரச்சனை தீர்வுக்கு இந்தியா உதவவுள்ளதால் சம்பூரில் இந்தியாவை வெளியேறும்படி கேட்க முடியாது என்று உங்கள் தளபதி மாவை சேனாதிராசா கூறினார்.
அப்படியென்றால் இனப்பிரச்சனை தீர்வுக்கு இந்தியா உதவும் என்பதாலா சிறப்புமுகாம் அகதிகளையும் விடுதலை செய்யுமாறு கோராமல் அவர் இருக்கின்றார்?
இங்களும் மாவை சேனாதிராசாவும் குடும்பத்துடன் இந்தியாவில் இருக்கிறீர்கள். ஒவ்வொரு வாரமும் இந்திய தூதுவரையும் இந்திய அரசையும் சந்திக்கின்றீர்கள்.
ஒருமுறையாவது இந்த சிறப்புமகாம் அகதிகளை விடுதலை செய்யும்படி இந்தியாவிடம் உங்களால் கேட்க முடியாமல் இருப்பது ஏன் அய்யா?
நீங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆயுட்கால தலைவராக இருக்கலாம்,
நீங்கள் திருகோணமலையின் நீண்டகால பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம்,
நீங்கள் இலங்கை நல்லாட்சி அரசின் விரும்பத்திற்குரிய எதிர்க்கட்சி தலைவராக இருக்கலாம்,
நீங்கள் இந்திய அரசின் உறுதியான விசுவாசியாக பெருமை கொள்ளலாம்,
ஆனால் நீங்கள் அடுத்த முறை தேர்தலில் மக்களிடம் வந்துதான் ஆக வேண்டும்என்பதை மறந்து விடாதீகள்.
கொஞ்சமாவது ஓட்டு போட்ட மக்களுக்கு நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.
No comments:
Post a Comment