•மன நோய்களும் மனக் கோளாறுகளும்
உளவியல் என்றவுடன் பலருடைய மனதிலும் தோன்றும் முதல் பிம்பம் சிக்மண்ட் ஃபிராய்டாகத்தான் இருக்க முடியும். ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர்.
ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல் உளம் சார்ந்த பிரச்சினைகளே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார்.
அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.
அவரது கோட்பாடுகளைப் பற்றிய பரிச்சயம் பலருக்குப் பெயரளவிலாவது உண்டு. ஆனால், அவற்றின் நெளிவுசுளிவுகளும் உளவியலுக்கு அவர் வழங்கிய பங்களிப்பையும் பெரும்பாலானோர் ஓரளவே அறிந்திருப்பார்கள்.
சரி, ஃபிராய்ட் பற்றிய உங்கள் அறிவைச் சோதித்துப் பார்க்கக் கீழ்வரும் ஐந்து வாசகங்களுக்குச் சரி அல்லது தவறு என்று விடையளித்துப் பாருங்கள்:
1. சிக்மண்ட் ஃபிராய்ட் உளவியலின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
2. ஆழ்மனம் என்ற நனவிலி மனதை முதன்முதலாகக் கண்டறிந்தவர் ஃபிராய்ட்தான்.
3. கனவுகள் பற்றிய அவரது புகழ் வாய்ந்த கண்டுபிடிப்புகளை இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
4. ஃபிராய்ட் கண்டுபிடித்த உளப்பகுப்பாய்வு என்ற சிகிச்சை முறை பல மனக்கோளாறுகளையும் சில மனநோய்களையும் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
5. ஃபிராய்ட் கையாண்ட ஆராய்ச்சி முறைமை அறிவியல்பூர்வமானது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அத்தனை வாசகங்களும் முற்றிலும் தவறானவை! இது பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால், அதுதான் உண்மை.
மேற்கண்ட வரிகள் பிராய்ட் அவர்களின் 160 வது பிறந்த தினத்தை முன்னிட்டு டாக்டர் தம்பிராசா அவர்கள் இந்து தமிழ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.
அக் கட்டுரையை படிக்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம்.
டாக்டர் தம்பிராஜா அவர்கள் எழுதிய “மனநோய்களும் மனக்கோளாறுகளும்” என்னும் நூல் மனநோய் பற்றிய விழிப்புணர்வை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஜய்யமில்லை.
இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு இந்த நூல் நிச்சயம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில்கூட அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது.
மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது உறவினர்கள்கூட கவனிப்பதில்லை. ஆனால் இந்த நூல் அவர்களை அரவணைத்து சிகிச்சை அளிக்க பெரிதும் வழிகாட்டுகின்றது.
மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
மக்களிடையே பரவலாக காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி, மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை, மறதிநோய் முதல் உளவியல்ரீதியான பாலியல் கோளாறுகள் வரை இந் நூல் விளக்குகின்றது.
எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந் நூல் வழங்கும் தகவல்கள் வாசகர் மனதில் மனநோய் பற்றிய விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும்.
தனது மருத்துவ அனுபவங்களினூடாக ஒரு அரிய நூலை தமிழில் எழுதி தமிழ் சமூகத்திற்கு பெரிதும் உதவி புரிந்த டாக்டர் தம்பிராசா அவர்களின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.
No comments:
Post a Comment