•தமது எம்.பி யின் கொலைக்கே நீதியைப் பெற முடியாதவர்கள்
40 ஆயிரம் தமிழ் மக்களின் கொலைக்கு நீதியைப் பெறுவார்களா?
40 ஆயிரம் தமிழ் மக்களின் கொலைக்கு நீதியைப் பெறுவார்களா?
அவர்களே குற்றவாளிகள்
அவர்களே பொலிஸ்
அவர்களே நீதிபதிகள்
அவர்களே தமக்கு தண்டனை அளிப்பார்களா?
அவர்களிடம் நீதி கிடைக்கும் என நம்புவது முட்டாள்தனம் இல்லையா!
அவர்களே பொலிஸ்
அவர்களே நீதிபதிகள்
அவர்களே தமக்கு தண்டனை அளிப்பார்களா?
அவர்களிடம் நீதி கிடைக்கும் என நம்புவது முட்டாள்தனம் இல்லையா!
படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினராக இருந்தவர்.
பட்டப்பகலில் கொழும்பு வீதியில் இவர் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்த குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
எய்தவன் இருக்க அம்பை நோவதுபோல் ரவிராஜ் கொலைக்கு உத்தரவிட்டவர்களை கைது செய்யாமல் கொலை செய்தவர்களை கைது செய்தார்கள்.
கொலையில் சம்பந்தப்பட்ட ஒருவர் அப்புரூவராக மாறி கைது செய்யப்ட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சாட்சி கூறியிருந்தார்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் எனக்கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்த தீர்ப்புதான் வரும் என்பது விசாரணையின் ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டது. அது தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யாவுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
நாளை மகிந்தவும் கோத்தபாயாவும் நீதிமன்றில் வந்து நாங்கள்தான் ரவிராஜைக் கொல்ல உத்தரவிட்டிருந்தோம் என்று கூறினால்கூட நீதிமன்றம் அவர்களை குற்றமற்றவர்கள் என்றுகூறி விடுதலை செய்யும் நிலையே இருக்கிறது.
அப்போதும்கூட சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் இலங்கையில் நீதி கிடைக்கக்கூடிய பொறிமுறை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்றே கூறிக்கொண்டிருப்பார்கள்.
இங்கு எமது கேள்வி என்னவெனில் தமது தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி யின் கொலைக்கே நீதியைப் பெற முடியாதவர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40 அயிரம் தமிழ்மக்களுக்கு எப்படி நீதியைப் பெற்றுதருவார்கள் என நம்புவது?
ஒரு எம்.பி யைக் கொன்ற கொலையாளிகளே தண்டிக்கப்படவில்லை என்றால் 40 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்ற கொலையாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என எப்படி நம்புவது?
நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை மூலம் நீதியைப் பெறமுடியும் எனக்கூறிய சம்பந்தரும் சுமந்திரனும் இனி என்ன கூறப்போகிறார்கள்?
குறிப்பு- சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது.
No comments:
Post a Comment