•ஒரு உற்ற நண்பனை ஈழத் தமிழினம் இழந்துள்ளது!
தனது இறுதிக் கணம் வரை ஈழத் தமிழருக்கு உறுதியான ஆதரவை தெரிவித்து வந்த கவிஞர் இன்குலாப் அவர்களின் மறைவு உண்மையில் ஈழத் தமிழருக்கு ஓர் இழப்பாகும்.
காசுக்காக கவிதை எழுதுபவர்கள் மத்தியில் அவர் மக்களுக்காக கவிதை எழுதியவர். அதனாலேயே அவர் “மக்கள் கவிஞர்” என்று அழைக்கப்பட்டார்.
விருதுகளுக்காக கவிதை எழுதுபவர்கள் மத்தியில் ஈழத் தமிழர்களுக்காக தனக்கு வழங்கப்பட்ட “கலைமாமணி” விருதையே திருப்பிக் கொடுத்தவர் அவர்.
வெண்மனி சாதி படுகொலைகளுக்கு எதிராக அவர் எழுதிய “ மனுசங்கடா நாங்க மனுசங்கடா” கவிதை பட்டி தொட்டி எல்லாம் அவர் பெயரை ஒலிக்கிறது.
தோழர் தமிழரசன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர் கவிஞர் இன்குலாப் அவர்கள்.
தோழர் தமிழரசன மறைந்த சில நாட்களின் பின்னர் நான் அவரை சந்தித்தபோது அவருடனான உரையாடலில் இதனை உணர்ந்து கொண்டேன்.
அதுமட்டுமல்ல அவர் ஈழத் தமிழர்கள் மீதும் பேரன்பு கொண்டவர். ஈழ ஆதரவாளர்கள் மீது “தடா” சட்டங்கள் பாய்ந்த காலங்களிலும்கூட அவர் தனது உறுதியான ஆதரவை வழங்கியவர்.
உண்மையில் ஈழத் தமிழர்கள் ஓர் உற்ற நண்பனை இழந்துள்ளார்கள்.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் செவ் வணக்கம் செலுத்துகிறோம்.
No comments:
Post a Comment