Saturday, December 31, 2016

•என்னது, ஜெயா அம்மையாருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமா?

•என்னது, ஜெயா அம்மையாருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமா?
ஏன்டா உங்களுக்கே இது ஓவராக தெரியவில்லையா?
ஜெயா அம்மையார் மரணத்தில் சந்தேகம் இருக்கு என்று உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து கூறிய நிலையிலும் சசிகலாவை பொதுச்செயலாளராக்க தீர்மானம் போட்டீங்க பரவாயில்லை
ஜெயா அம்மையார் மீது பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று தீர்மானம் போட்டீங்க, அதுவும்கூட பரவாயில்லை.
இதுவரை 36 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள நிலையிலும் அதனைப் பொருட்படுத்தாது ஜெயா அம்மையார் இறந்த தினத்தை விவசாயிகள் தினமாக அறிவிக்க தீர்மானம் போட்டீங்க, அதுவும்கூட பரவாயில்லை.
ஆனால் ஜெயா அம்மையாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று ஏன்டா தீர்மானம் போட்டீங்க?
அதுவும் செத்தவன்களுக்கு அமைதி நோபல் பரிசு வழங்குவதில்லை என்பதுகூட தெரியாமல் தீர்மானம் போட்டிருங்கிளேடா?
இது உங்களுக்கே ஓவராக தெரியவில்லையாடா? மற்றவன் தமிழனைப் பார்த்து சிரிக்க வைச்சிட்டியேளடா!
இன்னும் என்னனென்ன கூத்து ஆடப்போறியளோ தெரியவில்லையே?
அதுசரி உங்க சின்னம்மா சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்வாரா? அல்லது அவரும் ஏமாற்றுவாரா?
எழுபேர் விடுதலையாவது கிடைக்க வழி செய்வாரா? அல்லது அவரும் ஜெயா அம்மையார் வழியில் நாடகம் ஆடப்போகிறாரா?
ஜெயா அம்மையாரின் 30 ஆயிரம் கோடி ரூபா சொத்தை கைப்பற்றியிருக்கும் சசிகலா கும்பல் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கப்போகிறது.
ஏனெனில் தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயக அரசியல் அல்ல, பணநாயக அரசியலே

No comments:

Post a Comment