Saturday, December 31, 2016

•பிளீஸ்! சம்பந்தர் அய்யாவை யாராவது அப்பலோவில் சேர்த்துவிடுங்களேன் !

•பிளீஸ்! சம்பந்தர் அய்யாவை
யாராவது அப்பலோவில் சேர்த்துவிடுங்களேன் !
செத்தவன் தமிழன் என்றால்
சுட்டவன் இராணுவம் என்றால்
அவன் குற்றம் அற்றவன்.
இதுதான் இலங்கை நீதி.
இதுதான் ரவிராஜ் கொலைக்கான நீதி
நாளை ஜோசப் பரராஜசிஙகம் கொலைக்கான நீதியும் இதுவே.
ரவிராஜ் தன்னைத்தானே சுட்டு செத்தார்
ஜோசப் பரராஜசிங்கமும் அப்படியே செத்தார்
முள்ளிவாய்க்காலில் செத்த 40 அயிரம் பேரும்கூட
தங்களைத் தாங்களே சுட்டுக் கொன்றார்கள்.
இசைப்பிரியாவும் தன்னைத்தானே பாலியல் வல்லுறவு செய்து இறந்தார்.
இதுதான் நேற்றைய இலங்கை நீதி
இதுதான் இன்றைய இலங்கை நீதி
இதுதான் நாளைய இலங்கை நீதியும்கூட.
மனோ கணேசன் இலங்கை அரசில் ஒரு அமைச்சர்.
ஆனாலும் அவர் ரவிராஜ் கொலைக்கான தீர்ப்பை தைரியமாக விமர்சிக்கின்றார்.
ரவிராஜ் தன்னைத்தானே சுட்டு செத்தாரா என கிண்டலாக கேட்கிறார்.
ஆனால் எங்கள் தலைவர் சம்பந்தர் அய்யாவோ
வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறார்.
தனது கட்சி எம்.பியின் கொலைக்கே நீதியினைப் பெற முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு சிறுதுளிகூட இருப்பதாக தெரியவில்லை.
அவருக்கு தன் கட்சியின் எம்.பி யின் கொலைக்கான நீதியைவிட
அவருக்கு கொல்லப்பட்ட 40ஆயிரம் தமிழருக்கான நீதியை விட
அவருக்கு கிடைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவியே முக்கியம்.
இந்த பதவிக்காக
தமிழீழத்தை கைவிட்டார்
புலிகளை பயங்கரவாதிகள் என்றார்
சிங்கக்கொடியை மகிழ்வுடன் கைகளில் ஏந்தினார்
புத்த பிக்குகளை மண்டியிட்டு வணங்கினார்.
இத்தனையையும் கைவிட்டது போதாதென்று
வடக்கு கிழ்க்கு இணைப்பையும் சமஸ்டியையும்
 கைவிட்டுள்ளார் என்று சிங்கள அமைச்சர் கூறுகிறார்.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது.
இன்னும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யவில்லை
இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை
இராணுவம் மக்களின் காணிகளில் இருந்து வெளியேற்றப்படவில்லை.
இதுபற்றி கேட்டால் ஒரு வருடத்தில் தீர்வு வரப்போகுது என்றார்
இவர்கூறிய தவணை முடிய இன்னும்ட 4 நாட்கள் மடடுமே உள்ளது.
ஆனால் சம்பந்தர் அய்யாவோ நீண்ட உறக்கத்தில் இருக்கிறார்.
இவரை இனியும் விட்டுவைத்தால்
தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவிக் கொடுத்துவிடுவார்.
எனவே தமிழ் மக்களின் நலன் கருதி
யாராவது இவரை அப்பலோ மருத்துவமனையில் சேர்த்து விடுங்களேன்.
அப்படியாவது தமிழ் மக்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!

No comments:

Post a Comment