•சோ வின் மரணம் தமிழ் இனத்திற்கு இழப்பு அல்ல!
யார் இறந்தாலும் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் என அனுதாபப்படுவதே மக்களின் பொதுவான பண்பு.
ஆனால் ஒருவர் வாழும்போதே இவன் இன்னும் சாகவில்லையா என மக்கள் நினைப்பது மிகவும் சிலரையே.
அந்த சிலரில் ஒருவராக சோ விளங்கினார் என்பதே உண்மை. அந்தளவுக்கு தமிழ் மக்களால் அவர் வெறுக்கப்பட்டார்.
சோ பார்ப்பணராக பிறந்தார். பார்ப்பணியத்திற்காக வாழ்ந்தார். பார்ப்பணராகவே மறைந்தார். அதனால்தான் பாhப்பணியவாதிகள் அவரை போற்றுகின்றனர்.
தமிழ் மொழியை பழித்துக்கொண்டு தமிழில் பத்திரிகை எழுதி வெளியிட்டு சம்பாதித்தார். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் இனத்திற்கு எதிராக செயற்பட்டார்.
இவரைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் என்றால் அவர்கள் எல்லாம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் என்பார். ஈழத் தமிழர் என்றால் அவர்கள் எல்லாம் புலிப் பயங்கரவாதிகள் என்பார்.
இவர் ஒரு வழக்கறிஞர். ஆனாலும் அப்பாவி மக்களை பொலிசார் போலி மோதலில் படுகொலை செய்வதையும் பொலிசார் சட்டத்தை தம் கையில் எடுத்து தண்டனை வழங்குவதையும் சரி என்று நியாயப்படுத்துவார்.
ஆனால் கொலை மற்றும் பாலியல் குற்றங்களுக்காக காஞ்சி சங்கராச்சாரிகளை கைது செய்தால் உடனே பொங்கி எழுந்து கூச்சல் போடுவார். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கூடாது என்று கூச்சமின்றி எழுதுவார்.
இவர் ஒரு எம்.எல் ஏ வோ அல்லது எம்.பி யோ இல்லை. எந்தவொரு அரசியல் கட்சியையும் சேர்நதவரும் இல்லை. எந்த பதவியையும் வகித்தவர் அல்ல. நாட்டுக்காக உழைத்த தியாகியும் இல்லை.
ஆனால் இவர் சிறிது சுகயீனம் என்று மருத்துவ மனையில் படுத்தால் உடனே பிரதமர் முதல் ஜெயா அம்மையார் கலைஞர் என பல தலைவர்கள் ஓடிச் சென்று பார்வையிடுகின்றனர்.
1980ல் இலங்கை வந்து ஜே.ஆர் ஜெயவர்த்தனாவை சந்தித்து பரிசு வாங்கிச் சென்றார். அன்றுமுதல் அவர் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகவே எழுதியும் செயற்பட்டும் வந்தார்.
மரணப் படுக்கையில் இருந்த நிலையில் கூட இவர் தனது ஈழத் தமிழருக்கான எதிர்ப்பு உணர்வைக் கைவிட வில்லை. 30.11.2016 துக்ளக் இதழில்கூட தானே ஒரு கேள்வியை கேட்டு அதற்கு பதிலாக நஞ்சைக்; கக்கியுள்ளார்.
கேள்வி- இலங்கையில் பிரபாகரன் படை என ஒன்று புதிதாக முளைத்துள்ளதே?
சோ பதில் - இலங்கை அரசு இந்த அமைப்பின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இப்படி தோன்றுவதுதான் பிறகு பெரும் பிரச்சனையாக முடிகிறது.
மாணவர்கள அப்பாவிகள் என்றும் அவர்களை சுட்டது தவறு என்றும் இலங்கை அரசே கூறியுள்ளது. ஆனால் சோ வின் பார்ப்பணிய கண்களுக்கு அவர்கள் புதிதாக தோன்றும் பிரபாகரன் படையாக தெரிகிறது.
சோ வின் தமிழின விரோத செயற்பாடுகளால் 1986ல் மதுரையில் அவருக்கு அசிட் முட்டை வீசப்ட்டது. ஆனால் அதில் அவர் தப்பிவிட்டார். அதனையடுத்து அவருக்கு பல வருடங்களாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
சோ வின் மரணத்தில் ஏதாவது ஒரு வருத்தம் இருக்குமென்றால் அது அவர் ஒரு தமிழன் கையால் மரணமாகாமல் தப்பிவிட்டார் என்பது மட்டுமே.
அவர் தமிழன் கையால் மரணமடைந்திருந்தால் அது தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழ் இனத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் புரோக்கர்களுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.
வர்க்க எதிரியின் ரத்தத்தில் கை நனைக்காமல் இருக்கலாம். ஆனால் வர்க்க எதிரியுடன் கை குலுக்கி சமரசம் செய்ய ஒரு போதும் முனையக்கூடாது.
No comments:
Post a Comment