•நியூசீலாந்தில் இடம்பெற்ற கோரத் தீ விபத்து .
•தாயும் மகளும் பேரனும் பலி
•அகதிகள் சேவையாளர் கைலேஷ் இன்னும் அவசரப் பிரிவில் .
•தாயும் மகளும் பேரனும் பலி
•அகதிகள் சேவையாளர் கைலேஷ் இன்னும் அவசரப் பிரிவில் .
ஓக்லாந்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் வீட்டில் உறக்கத்திலிருந்த மூவர் பலியாகியுள்ளனர்.
வீட்டின் பிரதான குடியிருப்பாளர் கைலேஷ் தனபாலசிங்கம் (47)கடும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைலேஷ் நியூசீலாந்து, அகதிகள் சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக பணியாற்றிவந்தார்.
நியூசீலாந்து வருகின்ற அகதி அந்தஸ்துக் கோரிக்கையாளர்களுக்கு உரிய சட்ட உதவிகள் தொடர்பான பணிகளையும் குடியிருப்பு , அவர்களது குடும்பங்களை மீள இணைத்தல் போன்ற சேவைகளையும் செய்து வந்தவர் இவர்.
இவர் இந்தியாவில் சிறப்புமகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளின் விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.
“சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நான் எழுதிய நூலை நியூசிலாந்தில் அறிமுகம் செய்து பலரையும் இவ் சிறப்புமுகாம் விடயத்தில் அக்கறை கொள்ளச் செய்தார்.
அவரது குடும்பத்தில் ஏற்பட்ட இவ் இழப்பு மிகவும் கவலை தருகிறது. அவருடை குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் துயரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் கைலேஸ் பூரண நலம் பெற வேண்டும் என விரும்புகிறோம்.
No comments:
Post a Comment