•பெரியார் !
“பெரியாரியம்” புரட்சிகர கருத்து இல்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் புரட்சிவாதிகள் சாதித்ததைவிட அதிகமாக அவர் சாதித்தார்.
அதனால்தான் புரட்சிவாதிகளைவிட பெரியாரே அதிகமான மக்கள் மனங்களில் இருக்கிறார்.
ஒருவேளை புரட்சிவாதிகள் புரட்சியை மேற்கொண்டிருந்தால் பெரியாரியம் தோன்றியிருக்காது. ஏன் பெரியார்கூட ஒரு புரட்சிவாதியாக இருந்திருக்க கூடும்.
தமிழக மக்களைப் பொறுத்தவரையில் பெரியாரை பாராட்ட பல விடயங்கள் இருப்பதுபோல் அவரை திட்டி தீர்ப்பதற்கும் சில விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரியாரை நினைவு கூர ஒரு முக்கியமான விடயம் உண்டு.
தந்தை செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் பெரியாரை சந்தித்து ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டபோது “ நாமே இங்கு அடிமையாக இருக்கிறோம். உங்களுக்கு எப்படி ஆதரவு தருவது?” என்று அவர் கேட்டார்.
கலைஞர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது தமிழீழத்தை ஆதரிப்பார். ஆனால் ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு என்று ஏமாற்றுவார்.
ஆனால் பெரியார் அவ்வாறு ஈழத் தமிழர்களை ஏமாற்றவில்லை. அவர் உண்மையைக் கூறினார்.
பெரியார் தந்தை செல்வா அமிர்தலிங்கம் ஆகியோரிடம் மட்டும் இதைக் கூறவில்லை. தான் சந்தித்தபோதும் தன்னிடமும் இதையே கூறினார் என்று மாணவர் பேரவைத் தலைவர் சத்தியசீலன் என்னிடம் கூறினார்.
நாம் அறிந்தவரையில் பெரியாருக்கு பிறகு இந்த உண்மையை கூறிய இன்னொரு தலைவர் தோழர் தமிழரசன்தான்.
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று அவர் தெளிவாக கூறினார்.
பெரியார் கூறிய இந்த உண்மையை அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவும் உணர்ந்து செயற்பட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் ஈழத் தமிழருக்கு நேர்ந்திருக்காது.
ஈழத் தமிழர் வரலாறு வேறு விதமாக அமைந்திருக்கும்.
இனியாவது இதை உணர்வோமா?
No comments:
Post a Comment