அண்மையில் இரண்டு சம்பவங்கள் சுவிஸில் நடைபெற்றுள்ளன.
ஒன்று பலரும் அறிந்த திருமணம். இன்னொன்று தமிழக தலைவர் வேல்முருகன் ஜ.நாவில் ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்தமை.
பெண் ஒருவர் ஆணுக்கு தாலி கட்டிய அத் திருமணத்தை பலரும் கிண்டல் செய்தார்கள்.
அதுவும் மகிந்த ராஜபக்சவை தன் தலைவர் என்று கூறுபவர் புலம்பெயர்ந்த தமிழர்களால் தான் வெட்கிக் தலைகுனிவதாக பதிவு போடுகிறார்.
அந்த சுவிஸ் திருமணத்தில் பெணுக்கு தாலி சுமை என்று உணர்ந்த ஆண் ஒருவர் பெண்ணுக்கு சம உரிமை வழங்குவதாக நினைத்து தனக்கு தாலி கட்டிக் கொண்டார்.
இங்கு அவர் பெண்ணுக்கு தாலி சுமை என்று நினைத்தது தவறு இல்லை. பெண்ணுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று நினைத்ததும் தவறு இல்லை. மாறாக அதற்காக தனக்கு தாலி கட்டிக் கொண்டதே அவர் செய்த தவறாகும்.
எனவே இந்த தவறை நாகரீகமாக அத் தம்பதிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் புதுமணத் தம்பதிகள் என்ற இரக்கம்கூட காட்டாமல் பலரும் திட்டித் தீர்த்துவிட்டனர்.
“உன் மனைவியை இந்திரன் புணருகிறான். அப்புறம் சந்திரன் புணருகிறான். இறுதியாக நான் புணர்கிறேன். அப்புறம் கடைசியாக உனக்கு தத்தம் பண்ணி தருகிறேன்” என்று ஜயர் சமஸ்கிருத்தத்தில் கூறும் மந்திரத்தை அர்த்தம் புரியாமல் தலையாட்டும் இந்த பலர் அதற்காக வெட்கப்படுவதில்லை.
கேரளாவில் அண்மைக் காலம் வரை திருமணத்திற்கு முன் மணப்பெண் ஜயருடன் படுக்க அனுப்புவது வழக்கமாகவே இருந்து வந்துள்ளது.
இதற்காக எல்லாம் வெட்கப்படாதவர்கள் இதை எல்லாம் உடைக்க வேண்டும் நினைத்த சுவிஸ் தம்பதிகளை நினைத்து வெட்கப்படுகிறார்களாம்.
அதுமட்டுமல்ல இதை எல்லாம் சாட்டாக வைத்து ஈழத்தில் இருக்கும் சில மகிந்த விசுவாசிகள் புலம்பெயர்ந்த தமிழர் எல்லோரையும் நினைத்து தலைகுனிவதாக எழுதுகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு அதே சுவிஸில் புலம்பெயர்ந்த தமிழர் தமிழகத்தில் இருந்து தலைவர் வேல்முருகனை அழைத்து ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்க வைத்துள்ளமை ஏன் தெரியவில்லை?
நல்லவேளை அவர்கள் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் ஈழத் தமிழரிடம் பிச்சை எடுக்க வேல்முருகன் சுவிஸ் வந்தார் என்று எழுதித் தொலைத்திருப்பார்கள்.
சுவிஸ் வந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக வாழ்வரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
No comments:
Post a Comment