•திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது!
இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்று உரத்துகூற ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இல்லை. இருந்திருந்தால் இந்தியை திணிக்க அமிர்த்ஷா துணிந்திருப்பாரா?
தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் தமிழனுக்கு வேலை இல்லை என்றால தமிழ்நாட்டில் ரயில் ஓட முடியாது என்று உரத்து கூற ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இல்லை. இருந்திருந்தால் தமிழன் வேலைகளை வடநாட்டினருக்கு கொடுக்கும் துணிவு ரயில்வேக்கு வந்திருக்குமா?;
திருச்சி ரயில் கோட்டத்தில் தேர்வானவர்களில் 528 பேரில் வெறும் 53 பேர் மட்டுமே தமிழர்.
மதுரை ரயில் கோட்டத்தில் தேர்வானவர்களில் 572 பேரில் வெறும் 57 பேர் மட்டுமே தமிழர்.
ஏன் இந்த நிலை தமிழனுக்கு?
ஜந்து கோடி மக்கள் தொகை கொண்ட ஆங்கிலேயர் உலகையே ஆண்டனர்.
ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ் உலக வல்லரசில் ஒன்றாக இருக்கிறது.
வெறும் 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரவேல் முஸ்லிம் நாடுகள் எல்லாவற்றுக்கும் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுது.
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நோர்வே உலகில் உள்ள நாடுகளுக்கெல்லாம் பஞ்சாயத்து பேசுது.
ஆனால் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழன் வாரவன் போறவன் எல்லார் கிட்டேயும் அடி வாங்கி கெஞ்சிக் கொண்டிருக்கிறான்.
ஏனெனில் தமிழனுக்கு என்று ஒரு அரசு உலகில் இல்லை. அதனால்தான் ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்களவனிடமும் அடி வாங்குகிறான்.
கி.மு 600 ஆண்டில் தமிழன் மொழி மற்றும் எழுத்துடன் வாழ்ந்துள்ளான் என்று கீழடி ஆராய்ச்சி கூறுகிறது.
ஆனால் இன்று கேவலம் வெறும் 500 அண்டுகளுக்கு முன்னர் உருவான இந்தியை திணிக்காதே என்று கெஞ்ச வேண்டிய நிலை தமிழனுக்கு.
மத்திய அரசு கொண்டு வந்த வாகன தண்டப் பணச்சட்டத்தை அமுல் படுத்த மாட்டோம் என்று தெலுங்கானா முதலமைச்சர் தைரியமாக கூறுகிறார்
ஆனால் தமிழ்நாட்டு (டயர் நக்கி) அரசு சட்டத்தை அமுல்படுத்தி ஈரோட்டில் முதன்முதலாக பதினைந்தாயிரம் ரூபா பணம் வசூலித்துள்ளதாக பெருமையுடன் கூறுகிறது.
தமிழா!
எப்போது உணர்வு கொள்ளப் போகிறாய்?
எப்போது உணர்வு கொள்ளப் போகிறாய்?
No comments:
Post a Comment