பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகிறோம் என்று பிரதமர் ரணில் கூறுகிறார்.
காவி உடையில் வெறியாட்டம் போடாதீர்கள் என்று அமைச்சர் ராஜித காட்டமாக தெரிவித்துள்ளார்.
தான் பொலிசாருக்கு அறிவுறுத்தி நீதிமன்ற தடை உத்தரவு பெற வைத்தேன். ஆனால் வன்னி மாவட்ட எம்.பி ஒருவர்கூட இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று இந்து விவகார அமைச்சர் மனோகணேசன் வேதனையுடன் கூறுகின்றார்.
நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது.
சட்டம் மதிக்கப்படவில்லை.
நியாயம் கேட்ட வழக்கறிஞர் மற்றும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் மதிக்கப்படவில்லை.
நியாயம் கேட்ட வழக்கறிஞர் மற்றும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பிரதமர் ரணிலுக்காக ஓடிச் சென்று நீதியை நிலைநாட்டிய சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் இப்போது மௌனமாக இருக்கின்றனர்.
மௌனமாக இருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்க்காது என்று சுமந்திரன் கூறுகின்றார்.
சம்பந்தர் அய்யாவோ இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்.
சம்பந்தர்; அய்யாவும சுமந்திரனும் தமது சுயநலன்களுக்காக இவ்வாறு நடந்துகொள்வதால்தான் தமிழர் நலன்கள் சிங்கள புத்த பிக்குகளால் பாதிக்கப்படுகிறது.
சிங்கள புத்த பிக்குகள் இந்தளவு தைரியமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு எமது தமிழ் தலைமைகளும் ஒரு காரணம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் சேர்ந்து இருக்க வேண்டுமென்றால் இலங்கை மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். இலங்கை பௌத்தநாடாக இருக்க வேண்டுமென்றால் தமிழ் மக்கள் பிரிந்துபோக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உரத்து சொல்ல ஒரு தலைமை தமிழ் மக்களுக்கு வேண்டும்.
No comments:
Post a Comment