மங்கோலிய புத்த பிக்குவும்
ஈழத்து சம்பந்தர் ஐயாவும்!
ஈழத்து சம்பந்தர் ஐயாவும்!
மங்கோலியா நாட்டில் 200 வருடங்களுக்கு முன்னர் உயிர் நீத்த புத்த பிக்கு ஒருவரின் உடலை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
நின்ற நிலையிலேயே ஆழ்ந்த தியானத்தில் உயிர் துறந்த பிக்குவின் உடல் இத்தனை வருடங்களாக கெட்டுப் போகாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
அந்த நாட்டின் காலநிலை மற்றும் உடலில் பூசப்பட்டிருக்கும் ஒருவகை வாசனைத் திரவியம் என்பன உடல் கெட்டுப் போகாமைக்கு காரணமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
ஆனால் அந் நாட்டு மக்கள் அவர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவும் வேளை வரும்போது கண்களை திறப்பார் எனவும் நம்புகிறார்கள்.
இவரது உடலுக்கு அருகில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அது தமிழ் மொழியில் காணப்படுவதால் சோழ மன்னன் கல்வெட்டாக இருக்குமோ என சந்தேகம் உருவாகியுள்ளது.
அந்த கல்வெட்டில் “ ஈழத் தமிழருக்கு சம்பந்தர் ஐயா தீர்வு பெற்றுக் கொடுத்த பின்பு என்னை எழுப்பிவிடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
உடனே மங்கோலிய நாட்டு அரசு “சம்பந்தர் ஐயா எப்போது தீர்வு பெற்றுக்கொடுப்பார்?” என்று கூகுளில் தேடியது.
“அடுத்த தீபாவளிக்கு தீர்வு கிடைக்கும்” என்று சம்பந்தர் ஐயா கூறியதாக உதயன் பத்திரிகை வெளியிட்ட செய்தி கூகுளில் கண்ட மங்கோலியர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈழத்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ ஆனால் இப்போது மங்கோலிய மக்கள் அடுத்த தீபாவளி எப்போது வரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பு- படித்து முடிந்ததும் சிரித்துவிட்டு கடந்து செல்லுங்கள். இது வெறும் நகைச்சுவைக்கான பதிவு மட்டுமே.
No comments:
Post a Comment