இவர் ஒரு வித்தியாசமான தலைவர்தான்
இவர் மாலை பொன்னாடைக்கு பொருத்தமான தலைவர்தான்.
இவர் தமிழ் தலைவர் இல்லை. ஆனாலும் ஒரு தமிழனுக்காக சிறை சென்றார்.
ஒரு மலையக தமிழனின் உடலைப் புதைக்க இடம் இல்லை என்றவுடன் வாழ்நாள்பூராவும் அந்த தமிழனிடம் சந்தாப் பணம் பெற்ற எந்த மலையக தமிழ் தலைவரும் வரவில்லை.
இவர்தான் வந்தார். வந்தவர் மற்ற அரசியல்வாதிகள் போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு போயிருக்கலாம்.
ஆனால் இவரோ தானே அந்த தமிழனின் உடலை சுமந்து சென்றார். தானே அந்த உடலை புதைத்தார்.
அதனால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இங்கு வேதனையான விடயம் என்னவென்றால் அவர் எந்த தமிழனுக்காக சிறையில் அடைக்கப்பட்டாரோ அந்த தமிழ் இனத்தின் ஒரு தலைவர்கூட இவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரவில்லை.
ஆனாலும் அவரோ அல்லது அவரது மக்களோ அதைப் பற்றி கவலைப்படவில்லை.
சிறையில் இருந்து விடுதலை பெற்று வந்தவரை மக்கள் மாலை பொன்னாடை அணிவித்து மகிழ்வுடன் வரவேற்றனர்.
அவரும் மக்கள் மத்தியில் மகிழ்வுடன் மிதந்து வந்தார்.
இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இப்படி ஒரு தலைவரா என்று அதிசயிக்க வைக்கிறார்.
சிலர் இவர் செய்வது யாவும் அரசியல் ஸ்டண்ட் என்கிறார்கள். சரி அப்படியாயினும் ஒரு தலைவர் எம் மத்தியில் இல்லையே என ஏங்க வைக்கிறார்.
அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
No comments:
Post a Comment