Monday, January 30, 2023
1997ம் ஆண்டு திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில்
1997ம் ஆண்டு திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில் கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
பொலிஸ் காவலுடன் அழைத்து வரப்பட்ட என்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள்.
இன்னொருவருக்காக ஆஜராக சென்னையில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர் சந்திரசேகரிடம் என்னைக்காட்டி ஒரு ஈழத் தமிழர் என்று கூறப்படுகிறது.
ஒரு ஈழத் தமிழர் என்ற அந்த ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் உடனே எழுந்து என் அருகில் வந்தார்.
வந்தவர் என் கைகளைப் பற்றிக்கொண்டு உங்களுக்கு யாரும் வழக்கறிஞர் இருக்காரா? இல்லை என்றால் நான் உங்களுக்காக வாதாடுகிறேன்.பணம் எதுவும் தர தேவையில்லை என்றார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர். மிகவும் பிசியான வழக்கறிஞர். இருந்தும் எனக்காக வழக்காட முன்வந்தது அவருடைய ஈழத் தமிழர் மீதான பற்றைக் காட்டியது.
இதை இங்கு நான் எழுதுவதற்கு காரணம் நேற்று கிளப்கவுசில் ஒரு கனடா வாழ் ஈழத் தமிழர் இவரை ஈழத் தமிழருக்கு விரோதமானவர் என்று கூறிக்கொண்டிருந்தார்.
ஒருவரைப் பற்றி தாராளமாக விமர்சிக்கலாம். அது தவறு இல்லை. ஆனால் அவரைப் பற்றி நன்கு அறிந்துவிட்டு அதைச் செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment