Sunday, May 28, 2023
சைலேந்திரபாபு திண்டுக்கல் காவல்
சைலேந்திரபாபு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது தமிழ்த்தேசிய போராளி நாகராசனை போலி என்கவுண்டர் மோதலில் சுட்டுக்கொன்றார்.
அதற்கடுத்த வாரம் சிறையில் இருந்து என்னை கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு காவலாக அழைத்து சென்றபோது அதைக்கூறி என்னை மிரட்டினார்.
அவர் மிரட்டியதை நான் அப்போது நீதிமன்றில் நீதிபதியிடம் முறையிட்டு பாதுகாப்பு பெற்றது இன்றும் நினைவில் இருக்கிறது.
தோழர் நாகராசன் தமிழ்நாட்டில் தமிழத்தேசிய விடுதலைக்காக போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்டவர்.
அவர் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கியவர்.
அவர் தமிழ்த்தேசிய போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படுவார்.
அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. அவர் புளட் இயக்கத்திடம் பயிற்சி பெற்றவர் என அறிகிறேன்.
தமிழ்நாடு விடுதலைப் படையினர் பயன்படுத்தும் பைப் வெடி குண்டுகள் ஆரம்பத்தில் திருச்சி சிறீரங்கத்தில் ஒரு கவுன்சிலரின் லேத் பட்டறையிலேயே தயாரிக்கப்பட்டது. இதற்கு உதவியவர்கள் புளட் இயக்கத்தினரே.
தமிழ்நாடு விடுதலைப்படை தலைவர் தோழர் தமிழரசன் பயன்படுத்திய இரண்டு சப் மிசின்கன் துப்பாக்கிகளும் வழங்கியது எனது இயக்கமாக இருந்தாலும் அவை ரெலோ இயக்கத்தின் ஆயுதங்களே.
புலிகள் இயக்கமும் பல தமிழக இளைஞர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் மட்டுமல்ல பணம் கூட வழங்கியிருக்கிறது.
இவற்றை இங்கு நான் குறிப்பிடுவதன் காரணம் என்னவெனில் தமிழ்நாட்டில் ஒரு பலமான ஆயுத போராட்ட இயக்கம் வளர்ச்சி பெற்றிருக்குமாயின் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் ஈழப் போராட்டத்தில் பங்குபற்றியிருப்பர்.
அதுமட்டுமல்ல 2009ல் அழித்ததுபோன்று அத்தனை இலகுவாக சிஙகள அரசும் இந்திய அரசும் தமிழ் மக்களை கொன்று இனப்படுகொலை செய்ய முடியாத நிலை இருந்திருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment