கேரள முதல்வரை சந்தித்து உதவி கேட்க
தமிழக மீனவ குடும்பங்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக மீனவ குடும்பங்கள் முடிவு செய்துள்ளனர்.
இன்று தூத்துக்குடி மீனவர்கள் கேரள முதல்வரை சந்தித்துள்ளனர்.
அவரும் ஆவன செய்வதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் நாண்டுக்கிட்டு சாவுங்கடா!
மீட்புபணி அனைத்தும் முடிந்துவிட்டதாக கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
இறந்தவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாவும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்கள்மீது டார்ச்லைட் அடித்த கடற்படையிடம் குடி தண்ணீர் கேட்டதாவும் ஆனால் அவர்கள் தராமல் சென்றுவிட்டதாக கரை சேர்ந்த தமிழக மீனவர் தெரிவித்துள்ளார்.
இதைவிடக்கொடுமை என்னவென்றால் குஜராத்தில் கரைஒதுங்கிய தமிழக மீனவர்களை துறைமுகத்தினுள் குஜராத் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமன்றி அந்த தமிழக மீனவர்களுக்கு போதிய உணவுகூட அந்த அதிகாரிகளால் வழங்கப்படவில்லை.
அனைவரும் இந்தியர்கள் என்றால் மலையாள மீனவர்களுக்கு ஒரு கவனிப்பும் தமிழக மீனவர்களுக்கு புறக்கணிப்பும் ஏன்?
இதுதானா இந்திய நியாயம்?
குறிப்பு- மீனவர்களின் துயரத்தை தெரிவிக்காத தமிழ் ஊடகங்கள் நடிகர் விசாலின் வேட்புமனு நிராகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்கின்றன. அரசு மட்டுமல்ல ஊடகங்களும் தமிழனை புறக்கணிக்கின்றன.
No comments:
Post a Comment