•யாழ்ப்பாணத்தில் ராணுவம் கஞ்சா கடத்துகிறதா?
அண்மையில் ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பிடிபட்;டது.
இத்தகைய கஞ்சா உட்பட்ட போதைப்பொருட்களை இலங்கை ராணுவமே கடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றம் சாட்டியவர் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினரோ அல்லது சாதாரண குடிமகனோ இல்லை.
இவர் பெயர் துவாரகேஸ்வரன் . காலம்சென்ற அமைச்சர் (மண்ணென்ணெய்) மகேஸ்வரனின் சகோதரர். இன்றைய மகிளிர் விவகார அமைச்சர் விஜயகலா வின் மைத்துனர்.
அதுமட்டுமன்றி அளும்கட்சியான ஜக்கியதேசியக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் இவர் இருக்கிறார்.
பிரதமர் ரணிலின் நெருக்கமான நம்பிக்கைக்குரிய நபராகவும் தன்னைக் காட்டி வருகிறார்.
ராணுவமே போதைப் பொருள் கடத்துவதாக இவர் குற்றம்சாட்டியதோடு அதுகுறித்து பல தகவல்களை தான் பொலிசாருக்கு தெரிவித்தும் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறுகிறார்.
அதுமட்டுமன்றி தனது பஸ் வண்டியில் போதைப்பொருளை வைத்துவிட்டு தன்னைக் கைது செய்வதற்கும் பொலிஸ் திட்டமிடுவதாகவும் கூறுகிறார்.
இதுகுறித்து ஜனாதிபதியின் யாழ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததாகவும் அது ஒரு பயனற்ற அலுவலகம் என்றும் கூறுகிறார்.
இந்த நிலை தொடருமாயின் தான் 1.1.2018 முதல் தமது கொழும்பு பஸ் சேவையை நிறுத்தப் போவதாகவும் கூறுகிறார்.
போதைப்பொருள் கடத்தலை தடுக்க தான் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி கூறுகிறார்.
ஆனால் போதைப்பொருள் கடத்தலில் அமைச்சர் ரிசாத் பிடிபட்டபோது அவர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்போது அமைச்சர் விஜயகலாவின் மைத்துனர் ராணுவம்தான் போதைப்பொருள் கடத்துவதாக கூறுகிறார்.
இதற்காவது ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா?
குறிப்பு- துவாராகேஸ்வரன் தான் கைது செய்யப்பட்டால் தப்புவதற்காகவே இவ்வாறு முன்கூட்டியே கூறுவதாகவும் சிலர் கூறுகிறார்கள். எதுவாயினும் விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகள் கைது செய்ய ஜனாதிபதி உத்தரவிட வேண்டும்.
No comments:
Post a Comment