•எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் கணவர்
விட்டுவிட்டு சென்றாரடி!
ஏற்றி வைத்த என் கணவர்
விட்டுவிட்டு சென்றாரடி!
நாம் தெரிவுசெய்த எம் பிரதிநிதிகள்
உள்ளுராட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை
எப்படி தெரிவு செய்கிறார்கள் என்பதை பாருங்கள்!
உள்ளுராட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை
எப்படி தெரிவு செய்கிறார்கள் என்பதை பாருங்கள்!
05ம் திகதி மாட்டின் வீதியில் நடந்த கூட்டமைப்பின்; கூட்டத்தில்
நடந்ததாக கூறப்படும் சில சுவாரசியமான சம்பாசனைகள் இவை!
நடந்ததாக கூறப்படும் சில சுவாரசியமான சம்பாசனைகள் இவை!
•சிவமோகன் எம்.பி- முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று இரண்டு சபைகளையும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த எதற்கும் விட்டுக்கொடுக்க முடியாது. புதுக்குடியிருப்பில் சினிமா நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். பல இலட்சம் செலவானது. நீங்கள் வெல்லவோ நான் காசு செலவழித்தேன்?“ என மற்ற கட்சிகளை பார்த்து கேட்டார்.
•சிறீகாந்தா (ரெலோ)- சிவமோகன் பேச, ரெலோ செயலாளர் சிறிகாந்தா குறுக்கிட்டு “தம்பி நீங்கள் எந்த கட்சி சார்பில் பேசுகிறீர்கள், ஈ.பி.ஆர். எல்.எவ் இற்கா? தமிழரசுக்கட்சிக்கா?“ என கேட்டார்.
இதனால் கோபமடைந்த சிவமோகன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை திட்டி தீர்த்தார்.
இதனால் கோபமடைந்த சிவமோகன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை திட்டி தீர்த்தார்.
•சாந்தி சிறிஸ்கந்தராசா எம்.பி- “புதுக்குடியிருப்பை விடமாட்டோம். அது எனது ஐயா பிறந்த இடம். கரைத்துரைப்பற்றையும் விட முடியாது. அது நான் கலியாணம் செய்த இடம்” என்றார்.
அப்போது சீ.வீ.கே (மாகாணசபை அவைத் தலைவர்) தாழ்ந்த குரலில் பக்கத்தில் இருந்தவரிடம் – “இதென்ன பாரதி பாடலா நடக்கிறது? எந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவிய இடம் என்பதை போல பேசுகிறார்கள்?“ என கேட்டார்.
•சார்ள்ஸ் நிர்மலநாதன் (மன்னார் எம்.பி) - “மன்னாரில் அனைத்து இடங்களிற்கும் பொது வேட்பாளர் நியமிப்போம். பாதர்களுடனும், சித்தி விநாயகர் கோயில் ஐயருடனும் பேசி பொது வேட்பாளரை நியமிப்போம்“ என்றார்.
அப்போது சிவாஜிலிங்கம் (ரெலோ) சிரித்தபடி “தம்பி… என்ன கிரியையா செய்ய போறியள்? என கேட்டார்.
அப்போது சிவாஜிலிங்கம் (ரெலோ) சிரித்தபடி “தம்பி… என்ன கிரியையா செய்ய போறியள்? என கேட்டார்.
இவர்களை அரசியல் கோமாளிகள் என்று இதைப் படிப்பவர்கள் நினைக்கக்கூடும்.
ஆனால் இந்த கோமாளிகளின் கையில்தான் தமிழ் மக்களின் அரசியல் தலைவிதி தங்கியுள்ளதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது.
- தொடரும். (உரையாடல்கள் இன்னும் வெளிவரும்)
No comments:
Post a Comment