•சம்பந்தர் அய்யா அந்தளவு நல்லவராடா?
எனது இன்பாக்சில் வந்த மெசேஜ் இது,
"ஒரு விமானத்தில் 5 பேர் பயணம் சென்றார்கள்.
சம்பந்தர் அய்யா, ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், மகிந்த ராஜபக்ச, மற்றும் ஒரு சிறுவன்.
சம்பந்தர் அய்யா, ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், மகிந்த ராஜபக்ச, மற்றும் ஒரு சிறுவன்.
விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தது. ஆனால் 4 பாரசூட் தான் இருந்தது...
ஜனாதிபதி மைத்திரி: நல்லாட்சி அரசை நான்தான் காப்பாற்றனும் என்று அவர் குதிச்சிட்டார்...
.
அடுத்து பிரதமர் ரணில்: நான்தான் இடைக்கால யாப்பை எழுதி முடிக்கவேணும் என்றுகூறி அவர் குதிச்சிட்டார்...
.
அடுத்து பிரதமர் ரணில்: நான்தான் இடைக்கால யாப்பை எழுதி முடிக்கவேணும் என்றுகூறி அவர் குதிச்சிட்டார்...
அதற்கடுத்து மகிந்த ராஜபக்ச ஊர்வலம் வந்தவங்களுக்கு காசு கொடுக்க வேணடும் என்றுகூறி அவரும் குதிச்சிட்டார்.....
சம்பந்தர் அய்யா அந்த சிறுவனிடம் சொன்னாரு, தம்பி நான் வாழ்ந்துட்டேன், நீ இன்னும் வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாரசூட் எடுத்துகிட்டு நீ குதிச்சிடு என்று சொன்னாரு.
அந்த சிறுவன் சொன்னான், மகிந்த ராஜபக்ச குதிச்சது என் ஸ்கூல் பேக்.
இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்..."
இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்..."
•இதைப் பகிரத் தவறினால் மீண்டும் மகிந்த ராஜபக்ச ஆட்சியை பார்க்க நேரிடும்.. இதைப் பகிர்ந்தால் உள்ளுராட்சி தேர்தலில் சம்பந்தர் அய்யா வெல்வார். விரைவில் தமிழீழம் கிடைக்கும்.
அடேய்! சம்பந்தர் அய்யாவை நல்லவர், வல்லவர் என்று என்ன வேணுமானாலும் சொல்லுங்க. ஆனால் உள்ளுராட்சி தேர்தலில் ஜெயித்தால் தமிழீழம் கிடைக்கும் என்று மட்டும் சொல்லாதையுங்கடா. அதையெல்லாம் கேட்டு தாங்கும் சக்தி இல்லையடா.
மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து ஆயிரம்ரூபா செலவு செய்து தனது இருதய சிகிச்சைக்கு உதவி கேட்டுச் சென்ற முதியவருக்கு வெறும் 400 ரூபா மட்டும் கொடுத்தவரடா உங்கள் சம்பந்தர் அய்யா.
அப்படிப்பட்டவர் ஒரு சிறுவனுக்காக தான் சாக துணிந்தார் என்று எப்படியடா கொஞ்சமும் கூச்சமின்றி உங்களால் எழுதமுடிகிறது?
இப்படியெல்லாம் எழுதியாடா நீங்கள் தேர்தலில் வெல்ல வேணும்?
தூ….
No comments:
Post a Comment