•மக்களே! உஷார்
செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்
திருடர்கள் வரப் போகிறார்கள் !!!
செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்
திருடர்கள் வரப் போகிறார்கள் !!!
உள்ளுராட்சி தேர்தலையடுத்து மீண்டும் திருடர்கள் உங்கள் முன் வரப் போகிறார்கள்.
தேர்தலில் தமக்கு சீட்டு தரும்படி கோரி சண்டையை ஆரம்பித்துவிட்டார்கள்.
பதவிக்காக கட்சிக்குள் நடந்த சண்டையை தான் ஆரோக்கியமாக பார்ப்பதாக சுத்துமாத்து சுமந்திரன் வெட்கம் இன்றி கூறுகிறார்.
இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய சண்டை செய்யவில்லை. மாறாக தமது நலன்களை மேம்படுத்தவே போட்டி போடுகின்றனர்.
•போட்டியிடுபவர்கள் வென்றபின் 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை பெற்றுக்கொள்ளக்கூடாது.
•போட்டியிடுபவர்கள் வென்றபின் இந்தியாவில் சென்று குடியிருக்க்கூடாது. சொந்த தொகுதியிலேயே குடியிருக்க வேண்டும்.
•மக்கள் தம் குறைகளை தெரிவிக்க வசதியாக சொந்த தொகுதியில் ஒரு அலுவலகம் வைத்திருக்க வேண்டும்.
•தனக்கு உதவியாளராவோ அல்லது டிறைவராகவோ தன் குடும்ப உறுப்பினர்களை பதிவு செய்து சம்பளம் பெறக்கூடாது
•புலம்பெயர் நாடுகளுக்கு அடிக்கடி சென்று தனது சொந்தவீடு கட்ட மக்களிடம் நிதி பெறக்கூடாது.
•தனது குடும்பத்தவர்களை கொழும்பில் தங்கவைத்து அவர்களுக்கும் அரச சலுகைகள் பெறக்கூடாது
•தமக்கு பாதுகாப்பிற்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெறக்கூடாது. குறிப்பாக தமது பிள்ளைகள் நீச்சல் களம் செல்வதற்குகூட அரச வாகனம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு தரக்கூடாது.
•தமக்கு அடிக்கடி சொகுசு கதிரை வாங்கி மக்கள் பணத்தை வீண் விரயம் செய்யக்கூடாது
•வாரந்தோறும் இந்திய தூதுவரின் விருந்தில் கலந்துகொண்டு தண்ணியடிக்கக்கூடாது.
மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்படுபவர்களுக்கே கட்சிகள் சீட் வழங்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளுக்கு சம்மதிப்பவர்களுக்கே தாம் வாக்களிப்போம் என தமிழ் மக்கள் கூறவேண்டும்.
இப்படி ஒரு நிலை வருமாயின் அதன் பின் எத்தனை பேர் போட்டியிட வருகின்றார்கள் என பார்ப்போம்.
இன்று சண்டை பிடிப்பவர்களில் பாதிப்பேர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி மறைந்து விடுவார்கள்.
குறிப்பு- இந்த நிபந்தனைகள் ஒன்றும் கற்பனையானவை அல்ல. இதில் பெரும்பாலானவை ஜே.வி.பி கட்சியில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஜே.வி.பி கட்சியால் முடியுமென்றால் ஏன் தமிழ் கட்சிகளால் முடியாது?
மக்களே வோட்டு கேட்டு வருபவர்களிடம் இதனைக் கேளுங்கள்!
No comments:
Post a Comment