ஒருநாள் கோயில் யானை குளித்து நெற்றியில் விபூதி பீசி சுத்தமாக தெருவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாக்கடையில் புரண்டு கொண்டிருந்த பன்றி ஒன்று யானையைப் பார்த்து சவால் விட்டதாம்.
அப்போது சாக்கடையில் புரண்டு கொண்டிருந்த பன்றி ஒன்று யானையைப் பார்த்து சவால் விட்டதாம்.
ஆனால் யானையோ எதுவும் கேட்காதது போல் ஒதுங்கிச் சென்றதாம். அதைப் பார்த்த பன்றி தன் அருகில் இருந்த இன்னொரு பன்றியிடம் கூறியதாம் “பார்த்தியா, யானையே எனக்கு பயந்து போகின்றது?”என்றதாம்.
ஆனால் பன்றியை மிதித்தால் அதன் சாக்கடை நாத்தம் தன் உடம்பில் ஒட்டிவிடும் என்பதாலேயே யானை மௌனமாக ஒதுங்கிச் சென்றது என்ற விபரம் இந்த பன்றிக்கு தெரியவில்லை.
இந்தக் கதையை படித்தவுடன் சுமந்திரன் விட்ட சவாலுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மௌனமாக ஒதுங்கி போவது உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
அண்மையில் யாழ் தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் மாவை சேனாதிராசாவும் சுமந்திரனும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அவர்களுடைய உரையாடல் இது
சுமந்திரன்- “அண்ணை! நீங்கள் சட்டம் படித்திருக்க வேண்டும்”
மாவை சேனாதிராசா- “படித்து …..”
சுமந்திரன்- “பேமஸ்சான வக்கீலாக வந்திருக்கலாம்..”
மாவை சேனாதிராசா- “வந்து …..”
சுமந்திரன் - “ஜனாதிபதி சட்டத்தரணியாக வந்திருக்கலாம்”
மாவை சேனாதிராசா- “வந்து ….”
சுமந்திரன்- “எம்.பி யாகி தமிழ் மக்களை ஏமாற்றி நிறைய பணம் சம்பாதிக்கலாம்”
மாவை சேனாதிராசா- “அதைத்தானே இப்ப செய்து கொண்டிருக்கிறேன்”
சுமந்திரன்- ?????
குறிப்பு- நெடுக சீரியஸ் ஆன பதிவுகள் என்றால் கொஞ்சம் போர் அடிக்கும். எனவேதான் ரிலாக்ஸ்ற்கு இந்த நகைச்சுவை பதிவு.
சுமந்திரனை பன்றியுடன் ஒப்பிட்டு பன்றியைக் கேவலப்படுத்திவிட்டதாக தயவு செய்து யாரும் என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.
No comments:
Post a Comment