•சுமந்திரனின் அமோக வெற்றி
சிம்பாவே நாட்டில் அடுத்து நிகழும் தேர்தலுக்கு பயன்படுத்த வாக்கு போடும் இயந்திரங்களை வெளிநாட்டில் இருந்து தருவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஜனாதிபதி முகாபே தொடர்ந்து தேர்தல்களில் கோல்மால் பண்ணி வென்று வருவதால் எதிர்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவில் மோடி கட்சியினர் இம் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருப்பதால் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்வதென முடிவு செய்யப்பட்டது.
சிம்பாவே தேர்தல் திணைக்களம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இலங்கை தேர்தல் ஆணையர் வாக்கு எந்திரங்களை அனுப்பி வைத்தார்.
தென்னிலங்கையில் மகிந்த கோஸ்டியினர் ஏதும் கோல்மால் பண்ணியிருப்பர் என்ற சந்தேகத்தில் யாழ் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களை தேர்தல் ஆணையர் அனுப்பி வைத்தார்.
சிம்பாவேயில் இந்த வாக்கு எந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடைபெற்றது. முடிவுகளைப் பார்த்ததும் முகாபே மயங்கி விழுந்தார்.
ஏனெனில் அனைத்து எந்திரங்களும் “சுமந்திரன் அமோக வெற்றி” என்று முடிவுகளை தந்துகொண்டிருந்தது.
மயக்கம் தெளிந்து எழுந்த முகாபே கேட்ட முதல் கேள்வி “ யாரப்பா இந்த சுமந்திரன்? என்னைவிட எம்டனாக இருக்கிறானே?”
இது ஒரு நகைச்சுவை கதைதான். ஆனால் உள்ளு+ராட்சி தேர்தல் தொடர்பாக வரும் உண்மைக் கதைகள் இதைவிட நகைச்சுவையாக இருக்கின்றன.
யாழ் மாநகரசபை மேயர் வேட்பாளராக தமிழ்தேசியகூட்டமைப்பு ஆர்னோல்ட் என்பவரை அறிவித்துள்ளது.
இவர் எற்கனவே வட மாகாணசபை உறுப்பினராக இருக்கிறார். அப்படியிருக்க எதற்காக இவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்?
மாகாணசபை முதல்வருக்கு எதிராக ஆளுனரிடம் மனுக் கொடுத்ததைத்தவிர வேறு என்ன சாதனையை இந்த ஆர்னோல்ட் செய்துள்ளார்?
சுமந்திரன் இவருக்கு ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டாராம். அதனால் வேறு வழியின்றி இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.
சுமந்திரனுக்கு இவர் ஆதரவு வழங்கியதால் இப்போது இவருக்கு சுமந்திரன் ஆதரவு வழங்குகிறாராம்.
இதைப் பார்க்கும்போது பந்தியில் பக்கத்து இலைக்கு சொதி கேட்ட கதையல்லவா நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
No comments:
Post a Comment