•வடமாகாண கல்வி அமைச்சர் செய்வாரா?
வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தமிழகம் சென்றுள்ளார். அங்கு அவர் தமிழக அரசு அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார்.
அவர் ஏன் தமிழகம் சென்றார்? அங்கு அவர் என்ன பேசி வருகிறார்? என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.
ஆனால் அவர் தனது தனது தமிழக விஜயத்தை ஈழத் தமிழ் மக்களுக்கு பயன் உள்ள வகையில் மாற்ற முடியும்.
குறிப்பாக, அவர் கல்வி அமைச்சர் என்பதால் தமிழக அகதிமுகாம்களில் இருக்கும் அகதி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு வழங்கும்படி தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
அதுமட்டுமன்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களுக்கு தமிழக கல்லூரிகளில் உயர்கல்வி பெறுவதற்கு புலமைப்பரிசில்கள் வழங்கும்படி கோர வேண்டும்.
முக்கியமாக, தகவல்தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துமுகமாக தமிழகத்தில் உள்ளது போன்று ஈழத்தில் கணணிப்பூங்காக்களை ( IT PARK )நிறுவுவதற்கு உதவி கோர வேண்டும்.
இவையாவும் செய்ய வேண்டிய செய்யக்கூடிய விடயங்கள் ஆகும். இதனை அவர் செய்வாரா?
No comments:
Post a Comment