ஒரு கொலை செய்தால் தண்டனை ஆனால் 2000 பேரை கொலை செய்தால் 'பிரதமர்'
100 ரூபா திருடினால் தண்டனை ,ஆனால் 160000 கோடி ரூபா திருடினால் 'விடுதலை'
5000ரூபா விவசாய கடன் கட்டலைனா தற்கொலை , 5000 கோடி கடன் கட்டலைனா வெளிநாட்டில் 'சொகுசு வாழ்க்கை'
பெண்ணை பார்த்து விசிலடிச்சா தண்டனை , கற்பழித்து கொன்னா 'பத்தாயிரமும் தையல் மிஷினும் '
இதுதான் இன்றைய இந்திய சிஸ்டம். இதை மாற்றப் போகிறாராம் சுப்பர்ஸ்டார் ரஜனி.
ஆனால் இதே சிஸ்டம்தான் அவரை சுப்பர்ஸ்டார் ஆக்கியது.
தனது சம்பளத்தை பாதி வெள்ளையாகவும் மீதி கறுப்பாகவும் வாங்குபவர் சிஸ்டத்தை மாற்றப்போகிறாராம்.
அவர் மனைவி பள்ளி வாடகை கட்டவில்லை. தன் மனைவியை திருத்தமுடியாதவர் சிஸ்டத்தை திருத்தப் போகிறாராம்.
ரஜனி அரசியலுக்கு வருவதாக அறிவித்தவுடன் மகிந்த ராஜபக்சவும் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இப்போது புரிகிறதா ரஜனியின் அரசியல் வருகை யாருக்காக என்று.?
No comments:
Post a Comment