•வந்தே மாதரம் அல்ல
வந்தே ஏமாத்திறம்!
வந்தே ஏமாத்திறம்!
தமிழ்நாடு அளுநர் குஜராத்தில் இருந்து வந்தவர். இம்முறை தமிழக குடியரசுதின விழாவில் குஜராத் ஆதிக்கம் அதிகம்.
ஆனால் யாழ் இந்திய தூதர் நடராஜன் ஒரு தமிழர். இருந்தும் அவர் அசாமில் இருந்து கலைஞர்களை இறக்குமதி செய்துள்ளார்.
இவர்களுக்கு தமிழ் கலைஞர்கள் கிடைக்கவில்லையா அல்லது தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விருப்பமில்லையா?
சரி , அது கிடக்கட்டும். அவர்கள் தங்கள் விருப்பம் போல் கொண்டாடி தொலைக்கட்டும்.
ஆனால் அங்கு கொடுக்கப்படும் வடைக்கும் ரீ க்கும் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு ஓடும் நம்மவர்களுக்கு புத்தி இல்லையா?
கடந்த வாரம் தமிழ்நாட்டில் கரூர் அருகில் ஈழஅகதி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.
விசாரணைக்காக பொலிசாரினால் பிடித்துச்செல்லப்பட்ட அந்த அப்பாவி அகதி அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான்.
இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்று அகதிமுகாமில் இருந்த மக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய அகதிகளையும் பொலிசார் அடித்து விரட்டியுள்ளனர். அந்த இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக மூடி மறைத்துள்ளனர்.
அதுமட்டுமல்ல தமிழக பொலிசார் அகதிகளைப் பார்த்து “ தேவடியா மக்களே, அடித்துப் போட்டால் ஏன் என்று கேட்க ஆள் இல்லாத அகதி நாய்களே” என்று ஏசியுள்ளார்கள்.
அது உண்மைதான். தொடர்ந்து ஈழ அகதிகள் துன்புறுத்தப்படுகின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை.
ஆனால் சக ஈழத் தமிழன் தமிழகத்தில் கொல்லப்படும்போது அது குறித்து கொஞ்சம்கூட அக்கறை இன்றி வடைக்கும் தேநீருக்கும் யாழ் இந்திய தூதுவரின் குடியரசு விழாவிற்கு அலையும் நம்மவர்களை என்னவென்பது?
யாராவது ஒருவர்கூட யாழ் இந்திய தூதரிடம் தமிழகத்தில் ஈழ அகதிகள் துன்புறுத்தப்படுவது குறித்து ஏன் கேட்க தோன்றவில்லை?
யாழ் இந்திய தூதரின் விழாக்களை ஓடிச் சென்று சேகரித்து பிரசுரம் செய்யும் ஊடகவியலாளர்கள்கூட ஏன் கேட்கவில்லை?
கேட்டால் அப்புறம் இந்திய தூதரால் எறியப்படும் பிஸ்கட் துண்டுகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சமா?
ஆம். இந்திய தூதுவர் பாடுவது “வந்தே மாதரம்” அல்ல “வந்தே ஏமாத்திறம்”!
குறிப்பு-
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவது எப்போது?
யாராவது யாழ் இந்திய தூதரிடம் இதைக் கேட்பீர்களா?
No comments:
Post a Comment