Friday, January 19, 2018

•சுமந்திரன் ஏன் எமக்கான தலைவர் இல்லை?

•சுமந்திரன் ஏன் எமக்கான தலைவர் இல்லை?
பிரதமர் ரணில்- குடத்தனைக்கு கூட்டிச் சென்று நுங்கு வெட்டித் தந்தது போல கனடாவுக்கு எப்ப கூட்டிச் செல்லப் போகிறீர் மிஸ்டர் சுமந்திரன்?
சுமந்திரன்- அதுக்குத்தான் என் கனடா சீடன் டேவிட் பூபாலபிள்ளையிடம் ஒரு பிளான் போட்டுக் கொடுத்தன். ஆனால் அவன் சொதப்பி விட்டான் சேர்.
பிரதமர் ரணில்- ஏன்? என்னாச்சு? மிஸ்டர் சுமந்திரன்
சுமந்திரன்- முதல்ல ரூபவாகினியை அனுப்ப ஒழுங்கு செய்தேன். ஆனால் அதற்குள் கனடாவில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து விட்டார்கள்.
பிரதமர் ரணில்- ஓ! அப்படியா? இனி என்ன செய்வது?
சுமந்திரன் - நானே நேரில் போவதென்று முடிவு செய்துள்ளேன். ஆனால் அதில் ஒரு சின்ன பிரச்சனை.
பிரதமர் ரணில்- என்ன பிரச்சனை மிஸ்டர் சுமந்திரன்?
சுமந்திரன்- லண்டனில் இருக்கிறவங்க கொஞ்சம் முரட்டு பயலுகள். செருப்பால அடிச்சுப் போடுவாங்களோ என்று பயமாக இருக்கிறது. அதனால எனது அதிரடிப்படை பாதுகாப்பையும் என்கூட அழைத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் சேர்.
பிரதமர் ரணில் - நோ , நோ அது முடியாது. எமது அதிரடிப்படையை இன்னொரு நாடு ஆயுதங்களுடன் அனுமதிக்காது.
சுமந்திரன் - அப்ப என்ன செய்வது சேர்? கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் டெலோ சில்வெஸ்டர் என்பவரை அதிரடிப்படை கொண்டுதான் வெருட்டி வெளியேற்றினேன். அதுபோல லண்டனிலும் பிரச்சனை வந்தால் சமாளிக்கலாமே என்றுதான் கேட்கிறன்.
பிரதமர் ரணில்- மிஸ்டர் சுமந்திரன்! உமது பிரச்சனை எனக்கு புரியுது. நீர் எமக்கு செய்த உதவிக்கு நான் இதைக்கூட செய்ய மாட்டேனா? ஆனால் சர்வதேச சட்டம் இதற்கு இடங்கொடுக்காதே?
சுமந்திரன்- லண்டனில கூட்டத்திற்கு ஒரு டிக்கட் பத்தாயிரம் ரூபாய் என்று போடச் சொல்லியிருக்கிறன். இருந்தாலும் பத்தாயிரம் ரூபா டிக்கட் எடுத்து வந்து அடிப்பான்களோ என்று பயமாக இருக்குது.
பிரதமர் ரணில்- உங்க குடும்பம் கொழும்பில் திரிய இன்னொரு சொகுசு வாகனம் வேணும்மென்றால் கேளும் தாரன். அல்லது அவர்களுக்கும் அதிரடிப்படை பாதுகாப்பு வேணும்மென்டால் அதையும் தாரன். ஆனால் லண்டனுக்கு அதிரடிப்படையை அனுப்ப இயலாது.
சுமந்திரன்- சரி சேர்
பிரதமர் ரணில்- அப்புறம் முக்கியமான விடயம் என்னவென்றால் கனடா அரசு எமக்கு அழுத்தம் கொடுப்பதை எப்படியாவது நிறுத்த வேண்டும் மிஸ்டர் சுமந்திரன்.
சுமந்திரன்- கண்டிப்பாக செய்வேன் சேர். இலங்கையில் இப்போது நல்லாட்சி நடக்கிறது என்று கூறுவேன். அதுமட்டுமல்ல விரைவில் தீர்வும் வரப் போகுது என்று கனடா அரசுக்கு கூறுவேன்.
பிரதமர் ரணில்- புலம்பெயர் தமிழர் போராட்டம்தான் எமக்கு இப்ப பிரச்சனையாக இருக்குது. அதையும் நீர் குழப்பிவிட்டால் போதும்.
சுமந்திரன்- உங்கள் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன் சேர். வெற்றிச் செய்தியுடன் திரும்பி வருவேன். வந்ததும் “ஜனாதிபதி சட்டத்தரணி” போல் வேறு ஏதாவது பதவியும் பணமும் கொடுங்கள் சேர்.

No comments:

Post a Comment